ஜி.எஸ்.டி-யில் மட்டும் ரூ.4073 கோடி பாக்கி வைத்த மத்திய அரசு… மார்ச் மாதத்துக்குள் தருவார்கள் என்று நம்பும் ஓ.பி.எஸ்!

 

ஜி.எஸ்.டி-யில் மட்டும் ரூ.4073 கோடி பாக்கி வைத்த மத்திய அரசு… மார்ச் மாதத்துக்குள் தருவார்கள் என்று நம்பும் ஓ.பி.எஸ்!

தமிழக பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர், “2017-18ம் ஆண்டு முதல் தமிழகத்திற்கு ரூ.4073 கோடி ஜி.எஸ்.டி., நிலுவைத் தொகை உள்ளது

தமிழக அரசுக்கு மத்திய அரசு தர வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை  ரூ.4073 கோடி என்றும், அதை மார்ச் மாதத்துக்குள் மத்திய அரசு தரும் என்று நம்புவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

gst

தமிழக பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர், “2017-18ம் ஆண்டு முதல் தமிழகத்திற்கு ரூ.4073 கோடி ஜி.எஸ்.டி., நிலுவைத் தொகை உள்ளது; நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் மத்திய அரசு வழங்கும் என நம்புகிறோம்.
மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டுப் பங்காகப் பெறப்படும் மத்திய வரிகளின் நிதிப் பகிர்வு 2019-20ம் ஆண்டுக்கான திருத்த மதிப்பீடுகளில் வரலாறு காணாத வீழ்ச்சியைக் கண்டுள்ளதால் பெருமளவிலான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது” என்று குறிப்பிட்டார்.