ஜிம்பாப்வேயில் கடும் புயல்: 150 பேர் பலி; 15 லட்சம் பேர் பாதிப்பு!

 

ஜிம்பாப்வேயில் கடும் புயல்: 150 பேர் பலி; 15 லட்சம் பேர் பாதிப்பு!

ஜிம்பாவ்வேயின் கிழக்குப் பகுதியில் வீசிய இடாய் சூறாவளியில் தற்போது வரை 31 பேர் உயிரிழந்ததாகவும், 71 பேரைக் காணவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜிம்பாப்வே: தெற்கு ஆப்ரிக்க நாடுகளான ஜிம்பாப்வே, மொசாம்பிக் ஆகியவற்றை புயல் தாக்கியதில் 150 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜிம்பாப்வே, மொசாம்பிக், மலாவி ஆகிய நாடுகளை இடாய் என்ற புயல் கடுமையாகத் தாக்கியது. புயல் காற்று மற்றும் கனமழையால் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மரங்கள், தொலைத்தொடர்பு கம்பங்கள் சாய்ந்தன. வீடுகளின் கூரைகள் பிய்த்தெறியப்பட்டன. புயலுக்கு இதுவரை 150 பேர் உயிரிழந்ததாகவும், 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ttn

அப்பகுதியில், மின்சாரம், தொலைபேசி இணைப்பு ஆகியவை பாதிப்புகுள்ளாகியுள்ளது.  புயல் காரணமாக அந்த நாட்டின், சிம்னாமணி நகரத்தில் உள்ளவர்களே அதில் அதிகம் பாதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சூறாவளி காரணமாக பள்ளி ஒன்றில் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், அதில் இரண்டு மாணவர்கள் பலியானதாகவும், ஊடகங்கள் தெரிவித்தன. மேலும், 50 பேர், அந்தக் கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டிருப்பதாகக் குடிமைப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மோசமான வானிலை காரணமாக சில பகுதிகளில் மீட்புப் பணிகள் தாமதமடைந்தது வருவதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

ttn

சூறாவளியால் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததை அடுத்து, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.