ஜிப்ஸி படம் பார்த்த ஸ்டாலின்! – சரியான நேரத்தில் சரியான படம் என்று வாழ்த்து

 

ஜிப்ஸி படம் பார்த்த ஸ்டாலின்! – சரியான நேரத்தில் சரியான படம் என்று வாழ்த்து

ஜீவா நடிப்பில்,ராஜு முருகன் இயக்கத்தில் வருகிற 6ம் தேதி வெளியாக உள்ள படம் ஜிப்ஸி. பல தடைகளுக்குப் பிறகு இந்த படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.

நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாக உள்ள ஜிப்ஸி படத்தை பார்த்த தி.மு.க தலைவர் சரியான நேரத்தில் சரியான படம் என்று பாராட்டியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
ஜீவா நடிப்பில்,ராஜு முருகன் இயக்கத்தில் வருகிற 6ம் தேதி வெளியாக உள்ள படம் ஜிப்ஸி. பல தடைகளுக்குப் பிறகு இந்த படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.

      ஜிப்ஸி

நடிகர் ஜீவா நடித்த இந்த படம் சென்சார் போர்டின் முட்டுக்கட்டைகளால் வெளியாகாமலிருந்தது.சாலை பயணங்களில் ஏற்படும் காதலை மையமாகக் கொண்டு அரசியல் விஷயங்களை முன்னிலைப்படுத்தி ஜிப்ஸி உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குக்கூ, ஜோக்கர் படங்களை இயக்கிய ராஜு முருகன் படம் என்பதால் அரசியல் விமர்சனம் இருக்கும் என்று எதிர்பார்ப்பும் உள்ளது. சென்சார் போர்டின் தடைகளைக் கடந்து படம் மார்ச் 6ம் தேதி வெளியாக உள்ளது.இந்த படத்தின் சிறப்புக் காட்சியை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்த்தார்.

 

 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஃபோர் ஃப்ரேம்ஸ் அரங்கில் மு.க.ஸ்டாலினுக்காக பிரத்யேக திரையிடல் நடந்தது.படத்தைப் பார்த்த மு.க.ஸ்டாலின், “சரியான நேரத்தில் சரியான படம்” என்று படக்குழுவினரை வாழ்த்தியதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக மு.க.ஸ்டாலின் அசுரன் படம் பார்த்தார்.அதைத் தொடர்ந்து முரசொலி நிலம் தொடர்பான பிரச்னை எழுந்தது குறிப்பிடத்தக்கது