ஜிப்ஸி படக்குழுவின் யுக்தியைப் பார்த்து குழம்பிப்போன சென்சார் போர்டு!

ஜிப்ஸி படக்குழுவின் யுக்தியைப் பார்த்து குழம்பிப்போன சென்சார் போர்டு!

ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா, நடாஷா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘ஜிப்ஸி’ திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைதந்திருக்கிறார், அம்பேத்குமார் தயாரித்துள்ளார். ஜிப்ஸி திரைப்படம் பல சர்ச்சைக் காட்சிகளைக் கொண்டுள்ளதாக தணிக்கை பிரச்சினையில் சிக்கி நீண்ட காலம் வெளியாகாமல் இருந்தது. பல்வேறு கட்ட  போராட்டங்களுக்குப் பின்பு படம் திரையங்குகளைச் சேர்ந்துள்ளது. 

gypsy

படத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கட், பல காட்சிகள் ப்ளாக் அண்ட் ஒயிட் மாற்றம் என படக் குழு ஏகப்பட்ட சமரசங்களை செய்த பின்னர் தான் வெளியிட அனுமதிக்கப்பட்டிருக்கிறது. படம் மக்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ஒருசிலர் படத்தில் நிறைய திரைக்கதை தொங்கல்கள் இருக்கிறதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் படக்குழு சென்சார் கட் காட்சிகளை இணையத்தில் வெளிவிட்டு மார்க்கெட்டிங் செய்து வருகிறார்கள். இப்படி படக்குழு வெளியிட்ட காட்சிகள் அனைத்தும் நெட்டிஸன்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனால், நீக்கப்பட்ட காட்சிகள் அனைத்தையும் தொடர்ச்சியாக வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறார்கள். மேலும், படத்தின் டிஜிட்டல் வெர்ஸனில் சென்சார் கட் செய்யப்பட்ட காட்சிகளும் அதில் இணைத்து வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

gypsy-movie

இந்த மாதிரியான சர்ச்சைக் காட்சிகள் படத்தில் இடம்பெறக் கூடாது என்று நீக்கப்பட்ட நிலையில், அந்த காட்சிகளையே இணையத்தில் வெளியிட்டு படக்குழுவினர் விளம்பரம் செய்து வருவதுது சென்சார் போர்டு ஆபீசர்களை குழப்படையச் செய்துள்ளது.

ஏனென்றால்,  திரையரங்க வெளியீட்டுக்குத்தான் தணிக்கை தேவை. யூடியூப் மற்றும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கள் வெளியீட்டுக்கு சென்சார் செய்ய தேவையில்லை என்பதால் ‘ஜிப்ஸி’ படக்குழு இந்த முடிவை எடுத்திருக்கலாம்.

கருத்துச் சுதந்திரத்தை விரும்பும் இயக்குநர்களுக்கு டிஜிட்டல் பிளாட்பார்ம் ஒரு வரப்பிரசாதம் தான்!