ஜிப்ஸி: ‘தப்பான படம் எடுத்து ஏ சான்றிதழ் வாங்கல; தப்ப தட்டிக்கேட்டதால வாங்கியிருக்கேன்’; மிரள வைக்கும் ராஜூமுருகன்

 

ஜிப்ஸி: ‘தப்பான படம் எடுத்து ஏ சான்றிதழ் வாங்கல; தப்ப தட்டிக்கேட்டதால வாங்கியிருக்கேன்’; மிரள வைக்கும் ராஜூமுருகன்

அப்படிப்பட்ட காதலை இந்த மண்ணில் நடக்கும் சில அரசியல் நிகழ்வுகள் எப்படி சிதைத்து வீசுகின்றது

பல தடைகளைத் தாண்டி ஒரு வழியாக இயக்குநர் ராஜூமுருகனின்  ‘ஜிப்ஸி’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. 

‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களுக்குப் பிறகு நடிகர் ஜீவா நடிப்பில் ராஜூமுருகன் இயக்கியிருக்கும்  திரைப்படம் ‘ஜிப்ஸி’. ஜோக்கர் படத்தில் ‘என்னங்க சார் உங்க சட்டம்’ என்று கேட்டு மத்திய, மணிலா அரசுகளை திக்குமுக்காடச் செய்தார் அந்த படைப்பாளி. மதவெறி, சாதிவெறி, பதவி வெறிகளை ஆட்டம் காண வைக்கும் வகையில், அடுத்த படமான ஜிப்ஸியிலும் பல விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதனால் தான் ஆரம்பத்திலிருந்தே ஜிப்ஸி படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்க   இருமுறை மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும்  மத்திய அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் காட்சிகளை நீக்கக் கூறியது. இதற்கு மறுப்பு தெரிவித்த படக்குழு, தீர்ப்பாயத்திற்குச் சென்றதையடுத்து ஒருவழியாகப் படத்திற்கு  ‘ஏ’ (A) சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

gypsy

‘ஏ’  சான்றிதழ் கொடுக்கும் அளவுக்கு ராஜூமுருகன் என்னதான் படம் எடுத்திருக்கிறார் என்று அவரது ரசிகர்கள் பலரும் குழம்பி தவிக்கின்றனர். அவர் எடுத்துள்ளது அழகான காதல் கதை. அப்படிப்பட்ட காதலை இந்த மண்ணில் நடக்கும் சில அரசியல் நிகழ்வுகள் எப்படி சிதைத்து வீசுகின்றது, எப்படி காதலும் மனிதமும் மனிதர்களை இறுதியில் ஒன்று சேர்க்கிறது என்பதை தனது பாணியில்  பொட்டில் அறைந்தாற்போல்  எடுத்துள்ளாராம். அதனால் ஜிப்ஸி படத்துக்கு இத்தனை எதிர்ப்பு.

raju

இருப்பினும் இதையெல்லாம் கண்டு கலங்காத ராஜு முருகன், தப்பான படம் எடுத்து ஏ சான்றிதழ் வாங்கல. நாட்டுல நடக்குற தப்ப தட்டிக்கேட்குற படத்தை எடுத்து ஏ  சான்றிதழ் வாங்கியிருக்கிறோம் என்று மார்தட்டிக் கொள்கிறார். 

rajumurugan

ஒவ்வொரு முறையும் படைப்பாளிகளை அச்சுறுத்தி, அவர்களின் படைப்புகளை முடக்கப்பார்க்கும் ஆளுங்கட்சிகளுக்கு ராஜு முருகனின் பதில் மட்டும் அல்ல படைப்பும் பதிலடி கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.