ஜார்கண்ட் பா.ஜ.க முதல்வர் ரகுபர் தாசுக்கு பின்னடைவு!

 

ஜார்கண்ட் பா.ஜ.க முதல்வர் ரகுபர் தாசுக்கு பின்னடைவு!

ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. இதில் பாரதிய ஜனதா ஆட்சியை தக்க வைக்காது என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளுக்கு ஏற்ப ஜார்கண்ட் முக்தி மோட்சா – காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளது.

ஜார்கண்ட் முதல்வர் 771 வாக்குகள் வித்தியாசத்தில் பின் தங்கியுள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. இதில் பாரதிய ஜனதா ஆட்சியை தக்க வைக்காது என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளுக்கு ஏற்ப ஜார்கண்ட் முக்தி மோட்சா – காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளது. ஆனால், இது தற்காலிகமானதுதான், பாரதிய ஜனதா வெற்றிபெற்று ஆட்சியை அமைக்கும் என்று அம்மாநில முதல்வர் ரகுபர் தாஸ் தெரிவித்திருந்தார்.

raghubar-das polled vote

மேலும், இன்னும் பல சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டியுள்ளது. இதனால், முன்னணியை நம்ப முடியாது என்று கூறியிருந்தார். அவர் கூறியது அவருக்கே நிஜமாகிவருகிறது. ரகுபர் தாஸ் ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் போட்டியிட்டார். அந்த தொகுதியில் அவரை விட சுயேட்சை வேட்பாளர் சராயு ராய் என்பவர் முன்னிலை பெற்றுள்ளார். அவர், 14,479 வாக்குகள் பெற்றுள்ளார். ரகுபர் தாஸ் 13,708 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் இடையே 771 வாக்குகள் வித்தியாசம். இந்த நிலை தொடருமா, மாறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.