ஜாமீனில் வெளியே வந்த சிறுவனை வெட்டி கொன்ற கும்பல்: அண்ணன் கொலைக்கு பழி தீர்த்த கோர சம்பவம்!

 

ஜாமீனில் வெளியே வந்த சிறுவனை வெட்டி கொன்ற கும்பல்: அண்ணன் கொலைக்கு பழி தீர்த்த கோர  சம்பவம்!

சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து ஜாமீனில் வெளிவந்த 17 வயது சிறுவன் பழிக்குப்பழியாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து ஜாமீனில் வெளிவந்த 17 வயது சிறுவன் பழிக்குப்பழியாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்பேடு மேட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயதான விக்னேஷ். அதே பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் கணேஷ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கடந்த மே மாதம் கைதாகி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, இரு வாரங்களுக்கு முன் ஜாமீனில் விக்னேஷ் வெளியே வந்தார்.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட கணேஷின் சகோதரர் பிரகாஷ், விக்னேஷை பழி தீர்க்கும் நோக்குடன் தனது நண்பர்களுடன் சென்று விக்னேஷை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த காயமடைந்த விக்னேஷை அவரது பெற்றோர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், அங்குச் சிகிச்சை பலனின்றி விக்னேஷ் உயிரிழந்தார். 

murder

இந்தக் கொலை வழக்கில், பிரகாஷ், மோகன், அஜித், ஆரோக்கியம், சாரதி ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அண்ணனைக் கொன்ற விக்னேஷைக் பழி தீர்ப்பதற்காக கொன்றதாக பிரகாஷ் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.