ஜாக்டோ – ஜியோ வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு; போராட்டத்தை கைவிட முதல்வர் வேண்டுகோள்

 

ஜாக்டோ – ஜியோ வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு; போராட்டத்தை கைவிட முதல்வர் வேண்டுகோள்

ஜாக்டோ – ஜியோவினர் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்

சென்னை: ஜாக்டோ – ஜியோவினர் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 4-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் அறிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் எட்டப்படமால் தோல்வியில் முடிந்தது. இதனால் இன்று ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழுவில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற்றது. அதன் முடிவில், திட்டமிட்டபடி வருகிற டிசம்பர் 4-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அவர்கள் அறிவித்தனர்.

இந்நிலையில், ஜாக்டோ – ஜியோவினர் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது கஜா புயலினால் தமிழகத்தில் மீட்பு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பனிகளில் தமிழக அரசு ஈடுப்பட்டு வருவதால் அரசு அதிகாரிகள் தக்க ஒத்துழைப்பைத் தர வேண்டும் என்றும், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கோரிக்கைகளில் செயல்படுத்த வாய்ப்புள்ள கோரிக்கைகளை தமிழக அரசு முறையாக செயல்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.