ஜல்லிக்கட்டு காளைகளை அடக்குவதற்கான வயது 18 லிருந்து 21 ஆக உயர்வு

 

ஜல்லிக்கட்டு காளைகளை அடக்குவதற்கான வயது 18 லிருந்து 21 ஆக உயர்வு

ஜல்லிக்கட்டு காளைகளை அடக்குவதற்கான குறைந்தபட்ச வயது 18 இல் இருந்து 21ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு காளைகளை அடக்குவதற்கான குறைந்தபட்ச வயது 18 இல் இருந்து 21ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழர் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் விமரிசையாக நடைபெற உள்ளன. இதற்காக காளைகளும், காளைகளை அடக்க மாடுபிடி வீரர்களும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் மாடு பிடி வீரர்களுக்கான வயது நிபந்தனையை அரசு மாற்றியுள்ளது. இதுவரை 18 வயது முதல் 45 வயதுடைய நபர்கள் காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு குறைந்தபட்ச வயது 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 18 வயதுடையவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாவதாகவும், இதனை தவிர்க்கவே புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார். 

jallikattu

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துகொள்ள மாடுபிடி வீரர்களுக்கான உடல்தகுதி பரிசோதனை நாளை நடைபெறும் என்றும், பாலக்காடு ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்பவருக்கான உடல் தகுதி பரிசோதனை நாளை மறுநாள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.