ஜம்மு காஷ்மீர், லடாக்கிற்கு ஒரே உயர்நீதிமன்றம் 

ஜம்மு காஷ்மீர், லடாக்கிற்கு ஒரே உயர்நீதிமன்றம் 

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கு பொதுவாக ஒரே உயர்நீதிமன்றம் செயல்படும் என ஜம்மு காஷ்மீர் நீதித்துறை பயிற்சி கழகத்தின் இயக்குனர் ராஜீவ் குப்தா தெரிவித்துள்ளார். 

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கு பொதுவாக ஒரே உயர்நீதிமன்றம் செயல்படும் என ஜம்மு காஷ்மீர் நீதித்துறை பயிற்சி கழகத்தின் இயக்குனர் ராஜீவ் குப்தா தெரிவித்துள்ளார். 

Jammu

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை தனித்தனி யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன. இவற்றிற்கு பொதுவாக ஒரே உயர்நீதிமன்றம் செயல்படும் என ஜம்மு காஷ்மீரின் நீதித்துறை பயிற்சி கழகத்தின் இயக்குனர் ராஜீவ் குப்தா கூறியுள்ளார். இந்த இரு யூனியன் பிரதேசங்களுக்கும் 108 மத்திய சட்டங்களும் பொருந்தும் என அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நடைமுறையில் இருந்த 164 மாநிலச் சட்டங்கள் நீக்கப்படுவதாகவும், எஞ்சிய 166 சட்டங்கள் தொடரும் என்றும் ராஜீவ் குப்தா கூறியிருக்கிறார்.