ஜம்மு காஷ்மீரில் 100 நாட்களுக்கு பின் இயங்கிய பயணிகள் ரயில்!

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை மத்திய அரசு ரத்து செய்து நேற்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், நேற்று பாரமுல்லா- ஸ்ரீநகா் இடையேயான வழித்தடத்தில் 100 நாட்களுக்குப் பிறகு ரயில் சேவை தொடங்கியது.

railway

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய ரயில்வே அதிகாரி, இன்று இரண்டு முறை ரயில்கள் இயக்கப்பட்டன. பாதுகாப்புக் கருதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டும் ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா். பயணிகள் ரயில் சேவை மீண்டும் இயக்கப்பட்டாலும், இன்றும் செல்போன்கள், இணையத் தொடர்பு ஆகியவற்றுக்கு காஷ்மீரில் தடை நீடித்து வருகிறது.