ஜம்மு அண்டு காஷ்மீரில் இன்று காலை முதல் மீண்டும் 2ஜி மொபைல் இன்டர்நெட் சேவை

 

ஜம்மு அண்டு காஷ்மீரில் இன்று காலை முதல் மீண்டும் 2ஜி மொபைல் இன்டர்நெட் சேவை

ஜம்மு அண்டு காஷ்மீரில் இன்று காலை முதல் மீண்டும் 2ஜி மொபைல் இன்டர்நெட் சேவை மற்றும் லேண்ட் லைன் சேவை செயல்பாட்டு வந்தது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 5ம் தேதி நீக்கியது. அதற்கு முந்தைய நாளில் பாதுகாப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் லேண்ட் லைன், மொபைல் சேவைகளை மத்திய அரசு முடக்கியது. மேலும், முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பிரவினைவாத குழு தலைவர்கள் காவலில் வைக்கப்பட்டனர். பக்ரீத் பண்டிகை சமயத்தில் ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகள் கொஞ்சம் தளர்த்தப்பட்டது.

காஷ்மீர்

இருப்பினும், லேண்ட்லைன், மொபைல் சேவை போன்ற தொலைத்தொடர்பு சேவைகள் வழங்கபடாமல் இருந்தது. இது தொடர்பாக நேற்று அரசு நிர்வாகம் கூறுகையில், இந்த வார இறுதியில் தொலைத்தொடர்பு சேவைகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும். அடுத்த வாரம் முதல் பள்ளிகள் திறக்கப்படும் என கூறியது. அதன்படி, இன்று ஜம்மு காஷ்மீரில் லேண்ட் லைன் மற்றும் 2ஜி மொபைல் இன்டர்நெட்  சேவைகள் செயல்பாட்டுக்கு வந்தது.

மொபைல் இணைப்பு

ஜம்மு, ரேசாய், சம்பா, கதுவா மற்றும் உதாம்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் 2ஜி மொபைல் இன்டர்நெட் சேவை மீண்டும் தொடங்கியது. அதேவேளையில், ராம்பன் மாவட்டத்தில்  ரஜோரி, பூன்ஜ் மாவட்டங்களை தொடர்ந்து  கிஷ்வார் மற்றும் தோடா மாவட்டங்களில் லேண்ட் லைன் போன்  வேலை செய்ய தொடங்கியுள்ளது.