ஜப்பான் மீது தென்கொரியா அதிரடி முடிவு!! நீடிக்கும் இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக போர்!!

ஜப்பான் மீது தென்கொரியா அதிரடி முடிவு!! நீடிக்கும் இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக போர்!!

தென் கொரிய நாட்டின் வர்த்தக முன்னுரிமை கொண்ட நாடுகளின் பட்டியலில் இருந்து தற்போது ஜப்பானை நீக்கி அதிரடி முடிவு ஒன்றை மேற்கொண்டுள்ளது தென்கொரிய அரசு.

ஜப்பான் மீது தென்கொரியா அதிரடி முடிவு!! நீடிக்கும் இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக போர்!!

தென் கொரியா மற்றும் ஜப்பான் இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தக போர் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக, இரு நாடுகளிலும் வர்த்தகம் மேற்கொண்டு வரும் பல நிறுவனங்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். 

தென் கொரிய நாட்டின் வர்த்தக முன்னுரிமை கொண்ட நாடுகளின் பட்டியலில் இருந்து தற்போது ஜப்பானை நீக்கி அதிரடி முடிவு ஒன்றை மேற்கொண்டுள்ளது தென்கொரிய அரசு.

தென் கொரியா மற்றும் ஜப்பான் இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தக போர் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக, இரு நாடுகளிலும் வர்த்தகம் மேற்கொண்டு வரும் பல நிறுவனங்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். 

மேலும் இவ்விரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகத்தில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. வர்த்தகத்தில் தடை ஏற்பட்டுள்ளது என கூறினாலும் மிகை ஆகாது. அண்மையில் தென் கொரியாவின் வர்த்தகத்தை மென்மேலும் வீழ்ச்சி அடையச் செய்ய ஜப்பான் அரசு சில முயற்சிகளை மேற்கொண்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த தென் கோரியா மக்கள், ஜப்பானுக்கு எதிராக தென் கொரியாவின் பல முக்கிய இடங்களில் போராட்டங்கள் நடத்தினர். 

மக்களின் இந்த தொடர் எதிர்ப்பை கவனித்த தென் கொரிய அரசு, இவற்றுக்கு பதிலளிக்கும் அளிக்கும் விதமாக, தென் கொரிய அரசின் வர்த்தக முன்னுரிமை கொண்ட நாடுகளின் பட்டியலில் இருந்து ஜப்பானை நீக்கி அதிரடி மாற்றம் செய்துள்ளது.

இதுகுறித்து தென்கொரியாவின் வர்த்தக அமைச்சர் சங் யுன் மோ பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசுகையில்,  “எங்களது வர்த்தக முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 29 நாடுகளிலிருந்து ஜப்பானை நீக்குகிறோம். ஏற்றுமதிப் பொருட்களில் சர்வதேச வர்த்தக விதிமுறைகளை ஜப்பான் மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது” என்று தெரிவித்தார்.

இந்த மாற்றங்கள் செப்டம்பர் மாதம் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார் மேலோட்டமாக கூறிவிட்டு சென்ற அவர், முழு அறிவிப்புகள் மற்றும் வரைமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார். 

தென் கொரிய அரசின் இந்த அதிரடி முடிவிற்கு ஜப்பான் அரசு இதுவரை எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.