ஜப்பான் அனிமேஷன் ஸ்டுடியோ தீவிபத்து, ஒருவர் பலி, பலர் படுகாயம்!

 

ஜப்பான் அனிமேஷன் ஸ்டுடியோ தீவிபத்து, ஒருவர் பலி, பலர் படுகாயம்!

வீட்டிற்கு வெளியே இரவில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனங்களை தீக்கிரையாக்கி விளையாடும் சைக்கோக்கள் பற்றிய செய்திகள் நிறைய உண்டல்லவா. தங்களுக்கு சம்பந்தமேயில்லாத பொருட்கள்/கட்டிடங்கள்மீது காரணமே இல்லாமல் தீப்பற்ற வைப்பது இந்த சைக்கோக்களுக்கு பிடித்தமான விளையாட்டு.

வீட்டிற்கு வெளியே இரவில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனங்களை தீக்கிரையாக்கி விளையாடும் சைக்கோக்கள் பற்றிய செய்திகள் நிறைய உண்டல்லவா. தங்களுக்கு சம்பந்தமேயில்லாத பொருட்கள்/கட்டிடங்கள்மீது காரணமே இல்லாமல் தீப்பற்ற வைப்பது இந்த சைக்கோக்களுக்கு பிடித்தமான விளையாட்டு. இதேப்போல், ஜப்பானின் புகழ்பெற்ற கியோட்டோ அனிமேஷன் ஸ்டுடியோ கட்டிடத்தில் இன்று ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் பலியாக, மேலும் 30 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்களின் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Kyoto studio on fire

‘கே ஆன், ஹாருஹி சசூமியா” உள்ளிட்ட புகழ்பெற்ற அனிமேஷன் படங்களை தயாரிக்கும் ஜப்பானின் புகழ்பெற்ற நிறுவனம் கியோட்டோ அனிமேஷன். இன்று காலை ஸ்டுடியோ வளாகத்திற்குள் நுழைந்த அடையாளம் தெரிவிக்கப்படாத மர்மநபர், மூன்று மாடி கட்டிடத்தின்மீது ஏதோ திரவத்தை ஊற்றுவதையும், பின்னர் தீபற்ற வைப்பதையும் கண்டதாக சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.  என்ன காமெடி என்றால், மேற்படி நபர்மீதும் தீப்பற்றி அவனும் இப்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறான்.