ஜப்பானில் ரிலீசாகும் தல அஜித்தின் ‘விஸ்வாசம்’!

 

ஜப்பானில் ரிலீசாகும் தல அஜித்தின் ‘விஸ்வாசம்’!

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படம் இந்த பொங்கலுக்கு ஜப்பானிலும் ரிலீசாகவுள்ளது.

சென்னை: தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படம் இந்த பொங்கலுக்கு ஜப்பானிலும் ரிலீசாகவுள்ளது.

‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ வரிசையில் 4வது முறையாக இயக்குநர் சிவா-அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது.

இப்படத்தை ஜன.10ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வரும் நிலையில், முதன்முறையாக ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளில் தல அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படம் ரிலீசாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. தற்போது அதைத் தொடர்ந்து ஜப்பானில் விஸ்வாசம் திரைப்படம் ரிலீசாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை ஸ்பேஸ் பாக்ஸ் நிறுவனம் ஜப்பானில் வெளியிடுகிறது. அது குறித்து அறிவிப்பை அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. ’விஸ்வாசம்’ திரைப்படத்தை ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளில் செவென்த் சென்ஸ் சினிமாட்டிக் நிறுவன வெளியிடவிருப்பது குறிப்பிடத்தக்கது.