ஜன.,18-ல் அமைச்சரவை கூட்டம்: உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து ஆலோசனை

 

ஜன.,18-ல் அமைச்சரவை கூட்டம்: உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து ஆலோசனை

தமிழக அமைச்சரவைக் கூட்டம் ஜனவரி 18-ம் தேதி கூடுகிறது. அதில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம் ஜனவரி 18-ம் தேதி கூடுகிறது. அதில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்துக்கு அன்னிய முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில், கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் ரூ.2.42 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்வதற்கான 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இதனைத் தொடர்ந்து, சென்னையில் வருகிற 23, 24-ம் தேதிகளில் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இந்நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் ஜனவரி 18-ம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், உலக முதலீட்டாளர் மாநாடு மற்றும் அதற்கான பணிகள் குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு முன்பு நடைபெற்ற அமைச்ச்சரவைக் கூட்டங்களிலும் உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து விவாதிக்கப்பட்டது. பல்வேறு தொழில் நிறுவனங்கள் விரிவாக்கத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது