ஜன் தன் கணக்கு வைத்திருக்கும் பெண்கள் 20 கோடி பேருக்கு ரூ.10,025 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டது – நிர்மலா சீதாராமன்

 

ஜன் தன் கணக்கு வைத்திருக்கும் பெண்கள் 20 கோடி பேருக்கு ரூ.10,025 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டது – நிர்மலா சீதாராமன்

ஜன் தன் கணக்கு வைத்திருக்கும் பெண்கள் 20 கோடி பேருக்கு ரூ.10,025 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டது

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனைகளை சரிசெய்ய சுயசார்பு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதையடுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நான்கு கட்டமாக அந்த நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்களை அறிவித்தார். நேற்று தனது நான்காவது உரையில் அவர் பேசுகையில் நிலக்கரி, தாதுக்கள் பாதுகாப்பு உற்பத்தி, வான்வெளி மேலாண்மை, எம்.ஆர்.ஓக்கள் மின் விநியோக நிறுவனங்கள், விண்வெளி துறைகள், அணுசக்தி ஆகிய துறைகளில் பொருளாதார கட்டமைப்பு சீர்திருத்தங்களை நிதியமைச்சர் அறிவித்தார்.

இந்த நிலையில், இன்று ஐந்தாவது கட்டமாக ரூ.20 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி நிலம், தொழிலாளர் நலன், பணப் புழக்கம் தொடர்பான நிதி ஒதுக்கீடுகள் குறித்து அவர் அறிவித்தார். ஜன தன் கணக்கு வைத்திருக்கும் பெண்கள் 20 கோடி பேருக்கு ரூ.10,025 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. 2.2 கோடி கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.3,950 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் 6.81 கோடி மக்களுக்கு இலவச எல்பிஜி சிலிண்டர்கள் கிடைத்துள்ளன. இபிஎஃப்ஒ வைத்திருப்பவர்களில் 12 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் முன்கூட்டியே பணம் எடுத்துள்ளனர்.