ஜனநாயகத்தை காப்போம்: பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என திரைப்பட இயக்குநர்கள் பரிந்துரை

 

ஜனநாயகத்தை காப்போம்: பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என திரைப்பட இயக்குநர்கள் பரிந்துரை

ஜனநாயகத்தை காக்க பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என இந்திய திரைப்பட இயக்குநர்கள் பலரும் அறிவுறுத்தியுள்ளனர். பாஜக ஆட்சியில் பெரிதும் அவதிப்பட்டது இந்திய திரைப்படத்துறை. கலாச்சார காவலர்கள், சங் பரிவார் கும்பல்களுக்கு வளைந்து கொடுத்து படம் எடுக்க வேண்டிய சூழலை பாஜக ஏற்படுத்தி வைத்திருந்தது.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுக்கு வாக்களிக்க வேண்டாம் என 100-க்கும் அதிகமான இந்திய திரைப்பட இயக்குநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜனநாயகத்தை காக்க பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என இந்திய திரைப்பட இயக்குநர்கள் பலரும் அறிவுறுத்தியுள்ளனர். பாஜக ஆட்சியில் பெரிதும் அவதிப்பட்டது இந்திய திரைப்படத்துறை. கலாச்சார காவலர்கள், சங் பரிவார் கும்பல்களுக்கு வளைந்து கொடுத்து படம் எடுக்க வேண்டிய சூழலை பாஜக ஏற்படுத்தி வைத்திருந்தது. பாஜக ஆதிக்கம் செலுத்த தவிக்கும் தமிழ்நாட்டிலேயே ‘மெர்சல்’ படத்துக்கு எத்தனை எதிர்ப்பு என்பதை நீங்கள் பார்த்திருக்கக் கூடும்.

மெர்சல்

mersal

வட இந்தியாவில் பாஜக ஆதிக்கத்தை பற்றி கேட்கவே வேண்டாம். பத்மாவதி, உட்டா பஞ்சாப் உள்ளிட்ட பல படங்கள் வெளியாவதற்கு பெரிதும் போராட வேண்டியிருந்தது.

பத்மாவதி

padmavath

கருத்து சுதந்திரத்தை குழிதோண்டி புதைத்த இந்த பாஜக அரசாங்கத்துக்கு எதிராக திரைப்பட இயக்குநர்கள் ஒன்றிணைந்திருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

உட்டா பஞ்சாப்

உட்டா

பாஜவுக்கு வாக்களிக்க வேண்டாம் என கருத்து தெரிவித்த இயக்குனர்களின் பட்டியலில், பழம்பெரும் ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்தன், வெற்றிமாறன், சனல் குமார் சசிதரன், ஆசிக் அபு மற்றும் கபிர் சிங் சவுத்ரி உள்ளிட்ட பல முக்கியமான இயக்குநர்கள் இடம்பெற்றுள்ளனர்.

விவசாயிகள் போராட்டம்

விவசாயி

அவர்கள் பாஜகவுக்கு எதிரான வெளியிட்டுள்ள அறிக்கையில், தலித்துகள் இஸ்லாமியர்கள் மற்றும் விவசாயிகளை ஒடுக்குவது. இந்துத்துவ கொள்கையை தினித்து வெறுப்பரசியல் செய்வது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனநாயகம்

மேலும் அதில், பாஜகவினர் இணையத்திலும் சமூக வலைதளத்திலும் வன்மத்தை விதைக்கின்றனர். பாஜகவின் குறைபாடுகள் குறித்து கேள்வி எழுப்புபவர்களுக்கு தேச விரோதி என முத்திரை குத்துகின்றனர். தேசபக்தி என்பது அவர்களை பொறுத்தவரை பாஜகவின் வாக்கு வங்கியை அதிகரிக்க பயன்படுத்தும் ஒரு கருவியாக இருக்கிறது. ராணுவத்தை மிகைப்படுத்தி பேசுவதும், அவர்களின் வாக்கு சேகரிக்கும் யுக்தியில் ஒன்றாக உள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.