சோனியா காந்தியைப் போல மன்னியுங்கள் என்று அட்வை… கொந்தளித்த நிர்பயாவின் அம்மா

 

சோனியா காந்தியைப் போல மன்னியுங்கள் என்று அட்வை… கொந்தளித்த நிர்பயாவின் அம்மா

தூக்கு தண்டனை குற்றவாளிகளை சோனியா காந்தி போல மன்னிக்க வேண்டும் என்று நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் வேண்டுகோள் விடுத்ததற்கு நிர்பயாவின் அம்மா கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூக்கு தண்டனை குற்றவாளிகளை சோனியா காந்தி போல மன்னிக்க வேண்டும் என்று நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் வேண்டுகோள் விடுத்ததற்கு நிர்பயாவின் அம்மா கண்டனம் தெரிவித்துள்ளார்.

jyoti

2012ம் ஆண்டு ஓடும் பஸ்ஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை தேதி அறிவிக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து மனுக்கள் தாக்கல் செய்துவருவதால் தூக்கு போடுவது தாமதமாகி வருகிறது. டெல்லி சட்டமன்ற தேர்தலில் இந்த பிரச்னையை பா.ஜ.க அரசு கையில் எடுத்துள்ளது. இத்தனை நாள் கோமாவில் இருந்தது போன்று மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாததற்கு அரவிந்த் கெஜ்ரிவால் அரசுதான் காரணம் என்று குற்றம்சாட்டினர்.

delhi

இந்தநிலையில், சோனியா காந்தி தன்னுடைய கணவரும் இந்தியாவின் முன்னாள் பிரதமருமான ராஜிவ் காந்தி மரணத்துக்கு காரணமான நளினியை மன்னித்தார். அதுபோல, நிர்பயாவின் அம்மாவும் மன்னிக்க வேண்டும் என்று குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு நிர்பயாவின் தாய் ஆஷா தேவி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

singh

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “இதுபோன்று கோரிக்கை வைக்க எப்படி தைரியம் இருக்கிறது என்று தெரியவில்லை. இத்தனை வருடங்களாக அவரை நான் உச்சநீதிமன்றத்தில் பார்த்துள்ளேன். நன்றாக இருக்கிறேனா என்று ஒரு வார்த்தை கூட என்னிடம் அவர் கேட்டது இல்லை. இன்றைக்குக் குற்றவாளிகளுக்கு ஆதரவாக என்னிடமே கோரிக்கை விடுக்கிறார். இதுபோன்ற நபர்களால்தான் பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடக்கின்றன. என்னிடம் கோரிக்கை வைக்க இவர் யார்?” என்று காட்டமாகக் கேட்டார்.