சொல் பேச்சை கேட்காத 4 வங்கிகளுக்கு ரூ.1.75 கோடி அபராதம்!

 

சொல் பேச்சை கேட்காத 4 வங்கிகளுக்கு ரூ.1.75 கோடி அபராதம்!

கே.ஓய்.சி. விதிமுறைகளை மீறிய பொதுத்துறையை சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கி உள்பட 4 வங்கிளுக்கு மொத்தம் ரூ.1.75 கோடியை ரிசர்வ் வங்கி அபராதமாக விதித்தது.

நம் நாட்டின் மைய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கிதான் வங்கிகளுக்கு எல்லாம் பாஸ். ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு மற்றும் அனுமதியோடுதான் இங்கு எந்தவொரு நிதி நிறுவனங்களையும் யாராலயும் நடத்த முடியும். ரிசர்வ் வங்கி வங்கிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும். வங்கிகள் தவறு செய்தால் அபராதமும் விதிக்கும். இதனால் வங்கிகள் மிகவும் பொறுப்புடன் செயல்படும்.

ரிசர்வ் வங்கி

ஆனாலும், சில நேரங்களில் சில வங்கிகள் விதிமுறைகளை மீறி செயல்பட்டு ரிசர்வ் வங்கியிடம் மாட்டி விடுகின்றன. ரிசர்வ் வங்கியும் இதை தான் எதிர்பார்த்தேன் என்று  ஒரு தொகையை அபராதமாக அந்த வங்கிகளிடம் இருந்து கறந்து விடுகிறது. ரிசர்வ் வங்கி தொடர்ந்து வங்கிகளின் நடவடிக்கையை கண்காணிப்பதால்தான் அதில் பணத்தை போட்ட வாடிக்கையாளர்களால் நிம்மதியா தூங்க முடிகிறது.

இந்நிலையில், கே.ஓய்.சி. விதிமுறைகள், சட்ட விரோத பரிவர்த்தனை தடுப்பு, நடப்பு கணக்கு தொடங்குவது தொடர்பான தனது விதிமுறைகளை மீறியதாக பொதுத்துறையை சேர்ந்த வங்கிகளான பஞ்சாப் நேஷனல் வங்கி, அலகாபாத் வங்கி, யூகோ வங்கி மற்றும் கார்ப்ரேஷன் வங்கி ஆகியவற்றுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்தது. 

அபராதம்

விதிமுறையை மீறியதற்காக, பஞ்சாப் நேஷனல் வங்கி, அலகாபாத் வங்கி, யூகோ வங்கி ஆகிய 3 வங்கிகளுக்கும் அபராதமாக தலா ரூ.50 லட்சத்தை ரிசர்வ் வங்கி விதித்தது. அதேசமயம் கார்ப்பரேஷன் வங்கிக்கு அபராதமாக ரூ.25 லட்சம் விதித்தது. இந்த தகவல் ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.