சொன்னாதான் கேட்க மாட்டாய்ங்க, பாட்டாவே பாடிடுவோம்!

 

சொன்னாதான் கேட்க மாட்டாய்ங்க, பாட்டாவே பாடிடுவோம்!

எந்த ஒரு நல்ல விஷயத்துக்குப் பிறகும் விக்ரமன் பட கதை மாதிரி ஒரு சென்டிமென்ட் சீன் இருக்குமில்லையா? அதுபோலவே சந்தீப் வாழ்க்கையிலும் ஒரு துயரம் நிகழ்ந்துள்ளது. விபத்து ஒன்றில் சந்தீப்பின் மனைவி இறந்துவிட்டார்.

வண்டி ஓட்டும்போது ஹெல்மெட் போடணும், வேகமா போககூடாது, சிக்னலை மதிச்சு வண்டி ஓட்டணும் என இருசக்கர வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட கற்காலத்தில் இருந்தே போக்குவரத்து காவலர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும், ஒரு பயலும் அதனை மதிப்பதில்லை. சரி, வாய்மொழியாக சொன்னால்தான் கேட்பதில்லை, பாட்டா பாடி பார்ப்போம் என யோசனை வந்தது டெல்லி போக்குவரத்து காவலர் சந்தீப் ஷாஹிக்கு. இந்தியில் பிரபலமான ஆப்னா டைம் ஆயேகா (Apna Time Aayega) என்ற ராப் (rap) பாடலின் இசைக்கேற்ப சாலை பாதுகாப்பு பற்றிய வரிகளை எழுதி  பணியின் போதே பாடி வருகிறார். சந்தீப் பாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது.

Sandeep Shahi

எந்த ஒரு நல்ல விஷயத்துக்குப் பிறகும் விக்ரமன் பட கதை மாதிரி ஒரு சென்டிமென்ட் சீன் இருக்குமில்லையா? அதுபோலவே சந்தீப் வாழ்க்கையிலும் ஒரு துயரம் நிகழ்ந்துள்ளது. விபத்து ஒன்றில் சந்தீப்பின் மனைவி இறந்துவிட்டார். மனைவியை இழந்தது மாதிரி பிற குடும்பங்களும் அவரவர்  உறவினரை இழந்து தவிக்ககூடாது என்ற நல்ல நோக்கத்தில், தன் போக்குவரத்து காவலர் பணியை அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வரும் சந்தீப், இதுவரை ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டிவந்த 700 பேருக்கு தன் சொந்த செலவில் ஹெல்மெட் வாங்கி தந்துள்ளார். சந்தீப்பின் சேவையை மெச்சும் வகையில் மஹிந்திரா நிறுவனம் அவருக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளது.