சொந்த வீடு யோகம் தரும் செவ்வாய்க்கிழமை விரதம்

 

சொந்த வீடு யோகம் தரும் செவ்வாய்க்கிழமை விரதம்

நவகிரகங்களில் செவ்வாய் கிரகத்தை மங்களகாரகன் என்று போற்றுகிறோம். கிரகங்களில் மங்களகரமான கிரகம் செவ்வாய் தான். அதனால் தான் குடும்பத்தில் மங்களகரமான விசேஷங்கள் நடைபெறுவதற்கு செவ்வாய்க்கிழமை விரதத்தை  மேற்கொள்கிறோம்.  செவ்வாய்க்கு உகந்த கிழமை செவ்வாய்க்கிழமை. முருகனுக்கும், அம்மனுக்கு உகந்த கிழமையாகவும் செவ்வாய் இருக்கிறது. ஆனால், நாம் விசேஷங்களைச் செய்வதற்கும்,

நவகிரகங்களில் செவ்வாய் கிரகத்தை மங்களகாரகன் என்று போற்றுகிறோம். கிரகங்களில் மங்களகரமான கிரகம் செவ்வாய் தான். அதனால் தான் குடும்பத்தில் மங்களகரமான விசேஷங்கள் நடைபெறுவதற்கு செவ்வாய்க்கிழமை விரதத்தை  மேற்கொள்கிறோம்.  செவ்வாய்க்கு உகந்த கிழமை செவ்வாய்க்கிழமை. முருகனுக்கும், அம்மனுக்கு உகந்த கிழமையாகவும் செவ்வாய் இருக்கிறது. ஆனால், நாம் விசேஷங்களைச் செய்வதற்கும், பொருட்களை வாங்குவதற்கும், புதிய செயல்களைத் துவங்குவதற்கும், புத்தாடை அணிவதற்கும் என பல விஷயங்களுக்கு செவ்வாய்க்கிழமையைத் தவிர்த்து விடுகிறோம். பெயரிலேயே மங்களம் இருப்பதால் செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கும் செயல்களில் நிச்சயம் வெற்றி உண்டாகும். அதே போல் மங்களகாரகன் என்கிற பெயர் மட்டுமல்லாமல், செவ்வாய்க்கு பூமிகாரகன் என்கிற பெயரும் உண்டு. 

 

prayer

ஒருவர் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்றால் அவருக்கு செவ்வாய் கிரகத்தின் அனுகூலம் இருக்க வேண்டும். அப்படி செவ்வாய் கிரகத்தின் அனுகூலம் இருந்தால் தான் சொந்த வீடு கட்ட முடியும்.  முருகப் பெருமான் செவ்வாய்க்கு உரியவர். முருகனைக் கும்பிட்டு துவங்கும் செயல்கள் அனைத்துமே வெற்றியடையும் என்பது நம்பிக்கை. நாம் தவிர்த்து வருகிற செவ்வாய்க்கிழமையில் தான் கேரள மக்கள் திருமணம் நடத்துகின்றனர். செவ்வாயையும், முருகப்பெருமானையும், பூமாதேவியையும் வழிபட்டு செவ்வாயில் மங்கலப்பொருள் வாங்கினால் பன்மடங்கு பெருகுவதோடு, எல்லாச் சிறப்புகளும் நம்மைத் தேடி வரும். பெருமாளின் மனைவியான பூமாதேவியின் கர்ப்பத்தில் உதித்தவர் செவ்வாய். எனவே, செவ்வாயை ஒதுக்குவது பூமித்தாயைப் புறக்கணிப்பதற்கு சமமாகும். பூமாதேவியின் கர்ப்பத்தில் உதித்தவனும், மின்னலைப் போன்ற ஒளி கொண்டவனும், குமரனும், சக்தி ஆயுதம் தாங்கியவனும், பெருமை மிக்க மங்கலனுமாகிய செவ்வாயைப் போற்றுகிறேன் என்று பெரியவர்கள் போற்றி வழிபடுகின்றனர். 

house

பொறுமையின் இலக்கணமான பூமாதேவியின் ஆசியைப் பெற்றால் வாழ்வு சிறக்கும். சொந்தவீடு அமையவும், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் சேரவும் செவ்வாயை வழிபடலாம். மங்களம் தரும் செவ்வாய். செவ்வாய்கிழமை அன்று மட்டும் நமது வேண்டுதலை எந்த தெய்வத்திடமும் வைத்தாலும் அந்த வேண்டுதலை உடனே நிறைவேற்றிக் கொடுக்கும். செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்று புராணங்கள் கூறுகின்றன. 
செவ்வாய்கிழமை அன்று பரிகாரம் செய்தால் அதற்கு பலன் கிடைக்கும். செவ்வாய்கிழமை அன்று ஒரு பொழுது விரதம் இருந்து வந்தால் ஒன்பது வாரத்தில் உங்களுக்கு நல்லது நடக்கும். தொடர்ந்து ஒன்பது செவ்வாய்கிழமை தோறும் காலையில் குளித்து அருகில் உள்ள முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபடவேண்டும். பிறகு வீட்டுக்குத் திரும்பியதும், வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை மேற்கொள்ளவேண்டும். கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம் போன்ற முருகப்பெருமானுக்கு உரிய ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்யலாம். மாலை 6 மணிக்கு மறுபடியும் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும். இப்படி தொடர்ந்து ஒன்பது செவ்வாய்க்கிழமைகள் விரதம் இருந்தால், செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்கிவிடும் என்பது உறுதி. 

lord muruga

செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், பூமியினால் தீராத பிரச்னைகள் உள்ளவர்களும் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டு வந்தால், விரைவிலேயே செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும். செவ்வாய் தோஷத்தால் பெற்றோருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அதே போல் மாமனார், மாமியாரையும் செவ்வாய் தோஷம் பாதிக்காது. ஜாதகத்தில் செவ்வாய் நல்ல இடத்தில் அமைந்திருந்தால், அங்காரகன் கடன் தொல்லையின்றி, பூமியையும், செல்வத்தையும், வாகன யோகம் மற்றும் புகழையும் அள்ளிக்கொடுப்பார். நவக்கிரகங்களின் சன்னதியில் செவ்வாய் காயத்ரி மந்திரத்தை 36 முறை உச்சரித்து 9 முறை வலம் வந்து வணங்க செவ்வாய் தோஷத்தின் கடுமையைக் குறைக்கும். 
சிறுவாபுரி முருகனை ஒன்பது செவ்வாய்களில் வணங்கி வர, வாழ்வில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். நிலம் வாங்கி, வீடு கட்டும் கனவு நிஜமாகும். ஒன்பது செவ்வாய்க்கிழமைகள், தொடர்ந்து கோயிலுக்குச் சென்று, அவரை வணங்குவதால் ஜாதக ரீதியான கோளாறுகள் தணிந்து, கட்டுப்பாட்டுக்கு வரும். சொந்த வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யலாம்.