சொந்த பணத்தில் பிரச்சாரம் செய்யும் அதிபர் வேட்பாளர் ப்ளும்பெர்க் ! டிரம்ப் தோற்கடிக்கப்படுவார் என தகவல் !

 

சொந்த பணத்தில் பிரச்சாரம் செய்யும் அதிபர் வேட்பாளர் ப்ளும்பெர்க் ! டிரம்ப் தோற்கடிக்கப்படுவார் என தகவல் !

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்பை விட 17 மடங்கு சொத்து அதிகம் உள்ள தொழிலதிபர் ப்ளூம்பெர்க் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அமெரிக்க அதிபர் தேர்தலில்  தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்த்து கோடீஸ்வரரான மைக்கேல் ப்ளூம்பெர்க் களமிறங்கியுள்ளார். ப்ளூம்பர்க் டி.வி-யின் உரிமையாளரான இவர் நியூயார்க்கில் மாதம் 9,000 அமெரிக்க டாலர்கள் சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்தவர். ஆனால் கிட்டத்தட்ட ரூ.4 லட்சம் கோடிக்குச் சொந்தக்காரர் ஆகிவிட்டார் ப்ளும்பெர்க்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்பை விட 17 மடங்கு சொத்து அதிகம் உள்ள தொழிலதிபர் ப்ளூம்பெர்க் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அமெரிக்க அதிபர் தேர்தலில்  தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்த்து கோடீஸ்வரரான மைக்கேல் ப்ளூம்பெர்க் களமிறங்கியுள்ளார். ப்ளூம்பர்க் டி.வி-யின் உரிமையாளரான இவர் நியூயார்க்கில் மாதம் 9,000 அமெரிக்க டாலர்கள் சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்தவர். ஆனால் கிட்டத்தட்ட ரூ.4 லட்சம் கோடிக்குச் சொந்தக்காரர் ஆகிவிட்டார் ப்ளும்பெர்க். ஆரம்ப காலங்களில்  ஜனநாயகக் கட்சியில் அரசியல் பிரவேசத்தைத் தொடங்கிய, ப்ளூம்பெர்க் பின்னர் குடியரசுக் கட்சிக்குத் தாவினார்.

michael

2002-ம் ஆண்டு நியூயார்க் நகர மேயராக தேர்வான ப்ளூம்பெர்க். 2013 வரை மாதம் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் பெற்றார். பின்னர் மீண்டும் ஜனநாயகக் கட்சியில் ஐக்கியமானார்.  ப்ளூம்பெர்க் அமெரிக்காவின் 9-வது பெரும் பணக்காரர். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ப்ளூம் பெர்க் அலபாமா மாகாணத்தில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரப் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளார். 
அமெரிக்க அதிபர் தேர்தலைப் பொறுத்தவரை, மக்கள் நேரடியாக அதிபரைத் தேர்வு செய்தாலும் மாகாண உறுப்பினர்களின் ஆதரவும் கிடைக்க வேண்டும். அமெரிக்காவில் 50 மாகாணங்கள் உள்ளன. 538 மாகாண உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
அமெரிக்கத் தேர்தல் பிரசார செலவுக்கு பல கோடிகள் தேவைப்படும். இதனால், வேட்பாளர்கள் தங்களுக்காக மக்களிடமிருந்து நிதி திரட்டிக் கொள்வார்கள். ஆனால் மக்களிடமிருந்து நிதி திரட்டப் போவதில்லை, என் சொந்தப் பணத்தில் பிரசாரம் செய்யப் போகிறேன்’ என ப்ளூம்பர்க் அறிவித்துள்ளார். தொலைக்காட்சி விளம்பரத்துக்காக மட்டும் 37 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட ப்ளூம்பெர்க் திட்டமிட்டுள்ளார்.