சொந்த ஊரில் சுடுகாட்டிற்கு வழி இல்லை…. 8 வழி சாலையில் மயங்கி கிடக்கும் முதல்வர் எடப்பாடி!

சொந்த ஊரில் சுடுகாட்டிற்கு வழி இல்லை…. 8 வழி சாலையில் மயங்கி கிடக்கும் முதல்வர் எடப்பாடி!

‘சொந்த ஊர்ல சுடுகாட்டுக்கு போறதுக்கு சரியானதொரு பாதை கிடையாது. இவரு என்னன்னா… 8 வழி சாலையில ப்ளேன் வுடுவேன், லாரி வுடுவேன்னு தீவிரமா இருக்காரு. கோட், சூட் எல்லாம் போட்டுக்கிட்டு வெளிநாடுகளுக்கு விமானத்துல பறக்குறாரு… மறுக்கா வோட்டு கேட்டு இங்கன வரட்டும்’ என்று ஆவேசமாக கொந்தளிக்கிறார்கள் சேலம் மாவட்டத்தினர்.

village

ஆம்.. முதல்வர் எடப்பாடியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் தான் இந்த கொடுமை. சேலம், ஓமலூர் பகுதியில் நிறைய கிராமங்கள் இருக்கின்றன. அதில், தாத்தியம்பட்டி கிராமத்தில் எந்தவிதமான அடிப்படை வசதிகளுமே கிடையாது. சுமார் 200-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வரும் தாத்தியம்பட்டி கிராமத்தில் சரியான கழிப்பறை வசதிகள், மருத்துவ வசதிகள் என்று எந்தவிதமான அடிப்படை வசதிகளுமே கிடையாது. இவ்வளவு ஏன்… கிராமத்தில் யாராவது இறந்தால், அவர்களை அடக்கம் செய்வதற்கு சுடுகாடு கூட கிடையாது. சரி.. சுடுகாடு தான் இல்லை… பக்கத்தில் இருக்கும் சுடுகாட்டிற்கு இடுப்பளவு நீரில் நீந்தி, இறந்தவர்களை எடுத்துச் செல்கின்றனர். வேலூர் அருகே பாலத்தில் இருந்து கயிறு கட்டி, இறந்தவர்களை கீழிறக்கி அடக்கம் செய்த கொடுமை வீடியோவாக சில நாட்களுக்கு முன்னர் வலம்வந்தது. இந்நிலையில், முதல்வரின் சொந்த மாவட்டத்திலேயே இடுப்பளவு தண்ணீரில், லாரி ட்யூப் கட்டி, அதில் இறந்தவர்களை எடுத்துச் செல்கிறார்கள். இந்த கிராமத்திற்கும் சுடுகாட்டிற்கும் இடையே சரபங்கா என்ற ஆறு ஒடுகிறது. ஆற்றின் அக்கரையில் இருக்கிறது சுடுகாடு.  “அடிக்கடி இப்படி தாங்க நடக்கும். வாழறதுக்கு தான் எந்த வசதியும் இந்த அரசாங்கம் செய்து தரலைன்னா இறந்ததுக்கு அப்புறமும் இப்படி கஷ்டப்பட்டு தான் அடக்கம் செய்யறோம். இதுகுறித்து பல முறை புகார் அளித்து விட்டோம், முதல்வர் எங்கள் ஊரைச் சேர்ந்தவருன்னு ச்சும்மா பெருமைக்கு மட்டுமே சொல்லிக்கலாம். ஆனா அவருக்கு வெளிநாடுகள்ல போய், தொழில் செய்ய இங்கே வாங்கன்னு கூப்பிடறதுக்கு தான் நேரம் சரியா இருக்கு… எட்டு வழி சாலை போட்டே தீருவேன்னு அறிக்கை எல்லாம் விடறாரு.. ஆனா எட்டு வழி சாலையை பயன்படுத்த நாங்க எல்லாம் கிராமத்துலேயிருந்து வெளியில வரணுமில்ல… ” என்று கொந்தளிக்கிறார்கள் தாத்தியம்பட்டி கிராமத்தினர்.