சொத்தை வித்தாவது கம்பெனி நடத்துவோம் ! பி.எஸ்.என்.எல். அதிரடி !

சொத்தை வித்தாவது கம்பெனி நடத்துவோம் ! பி.எஸ்.என்.எல். அதிரடி !

துவண்டு கிடக்கும் நிறுவனத்தை தூக்கி நிறுத்த பி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிய யுக்தியை கையாள உள்ளது. இதன் மூலம் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 20,000 கோடி ரூபாய் நிதி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துவண்டு கிடக்கும் நிறுவனத்தை தூக்கி நிறுத்த பி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிய யுக்தியை கையாள உள்ளது. இதன் மூலம் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 20,000 கோடி ரூபாய் நிதி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

bsnl

தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் சலுகை மற்றும் ஆதிக்கம் காரணமாக பி.எஸ்.என்.எல் நிறுவனம் கிட்டத்தட்ட மூடும் நிலைக்கே தள்ளப்பட்டுள்ளது என்றே சொல்லலாம். ஆனால் அரசு நிறுவனம் என்பதால் எப்படியாவது அதை நடத்தியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது. 
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் பெரும்பாலும் நஷ்டத்தில் உள்ள நிலையில், சொத்துக்களை விற்று நிதி திரட்ட பி.எஸ்.என்.எல். முடிவு எடுத்துள்ளது

bsnl

. மும்பை, சென்னை, திருவனந்தபுரம், காசியாபாத் உள்ளிட்ட 14 நகரங்களில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சொத்துகள் தற்போது பயன்பாட்டில் இல்லாத காரணத்தால் அதை விற்று சுமார் 20,160 கோடி ரூபாய் திரட்ட பி.எஸ்.என்.எல் நிர்வாகம் திட்டம் தீட்டியுள்ளது.

bsnl

அக்டோபர் மாதத்தில் நிதிச்சுமையைக் குறைக்க மெகா விருப்ப ஒய்வுத் திட்டத்தை அமல்படுத்தியது பி.எஸ்.என்.எல். இதற்காக சுமார் 69 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த விருப்ப ஒய்வுத் திட்டத்தில் 80 ஆயிரம் ஊழியர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதன்மூலம் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு மாதம் சுமார் 600 கோடி ரூபாய் மிச்சமாகும்.