சொகுசு கப்பலில் சிக்கிய தமிழர்களை மீட்க வேண்டும்! – ராமதாஸ் வலியுறுத்தல்

 

சொகுசு கப்பலில் சிக்கிய தமிழர்களை மீட்க வேண்டும்! – ராமதாஸ் வலியுறுத்தல்

கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகள் உள்ள சொகுசு கப்பலில் சிக்கிய தமிழர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட ட்வீட்களில்,

கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகள் உள்ள சொகுசு கப்பலில் சிக்கிய தமிழர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட ட்வீட்களில்,
“ஜப்பான் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசுக் கப்பலில் கொரோனா வைரஸ் பாதித்த பயணிகளின் எண்ணிக்கை 150-ஐ தாண்டி விட்டதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்!

கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஜப்பான் கப்பலில் தமிழகத்தைச் சேர்ந்த  6 பேரும் தவித்து வருகின்றனர்.அவர்களை கப்பல் நிர்வாகம் கவனித்துக் கொள்கிறது என்றாலும் கூட அவர்களையும் பிற இந்தியர்களையும் உடனடியாக மீட்டு தாயகம் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!” என்று கூறியுள்ளார். மேலும் இந்த ட்வீட்களில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இணை அமைச்சர் உள்ளிட்டவர்களை டேக் செய்துள்ளார்.