சொகுசுப் படகில் தீ விபத்து! விபத்தில் 33பேர் பலி!?

 

சொகுசுப் படகில் தீ விபத்து! விபத்தில் 33பேர் பலி!?

கடலுக்கு அடியில் உள்ள பவளப்பாறைகளையும், கடல் வாழ் உயிரினங்களையும் கண்டு களிப்பதில் சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அப்படி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள சன்டாகுரூஸ் தீவில்  கடலுக்கு அடியில் உள்ள பவளப்பாறை மற்றும் கடல் வாழ் உயிரினங்களை கண்டுகளிக்க சுற்றுலாவாசிகள் சிறு படகுகளில் அடிக்கடி வந்து செல்வார்கள்.

கடலுக்கு அடியில் உள்ள பவளப்பாறைகளையும், கடல் வாழ் உயிரினங்களையும் கண்டு களிப்பதில் சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அப்படி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள சன்டாகுரூஸ் தீவில்  கடலுக்கு அடியில் உள்ள பவளப்பாறை மற்றும் கடல் வாழ் உயிரினங்களை கண்டுகளிக்க சுற்றுலாவாசிகள் சிறு படகுகளில் அடிக்கடி வந்து செல்வார்கள். அப்படி கடலுக்கு அடியில் செல்லும் போது, அவர்கள் கடலின் அடி ஆழத்தில் மூழ்கி செய்யப்படும் ஸ்கூபா டைவிங் எனப்படும் நீச்சல் முறையில் ஈடுபடுகின்றனர். 

island

இந்நிலையில் அங்குள்ள கடலில் ஸ்கூபா டைவிங் நீச்சல் செய்வதற்கான நிகழ்ச்சி 3  நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து பணியாளர்கள் உள்பட மொத்தம் 38 பேர் கொண்ட குழு ஒன்று சன்டாகுரூஸ் தீவில் சுற்றியுள்ள கடல் பகுதிக்கு படகில் சென்றனர். அப்போது படகில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த கடலோரக்காவல் படையினர் சம்பவ இடம் விரைந்து படகில் பரவிய தீயை அணைக்கும் முயற்சி மேற்கொண்டனர்.

ambulance

மேலும் படகில் சிக்கிய 5 பேரை உயிருடன் பத்திரமாக மீட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் சிக்கிய மேலும் 33 பேரின் நிலை என்னவென்று தெரியாததால் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.