சைக்கிளை திருடி செல்கிறேன் முடிந்தால் என்னை மன்னித்து விடுங்க… மன்னிப்பு கடிதத்தை வைத்து சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளி

 

சைக்கிளை திருடி செல்கிறேன் முடிந்தால் என்னை மன்னித்து விடுங்க… மன்னிப்பு கடிதத்தை வைத்து சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளி

ராஜஸ்தானிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பி செல்லும் வழியில் புலம்பெயர்ந்த தொழிலாளி ஒரு வீட்டில் சைக்கிளை திருடி விட்டு, மனதை கனக்க செய்யும் மன்னிப்பு கடிதத்தை வைத்து விட்டு சென்ற சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.

லாக்டவுனால் நாடு முழுவதும் தொழில்கள் முடங்கியதால் பல கோடி பேர் வேலைவாய்பை இழந்தனர். வேலைக்காக வெளிமாநிலங்களுக்கு புலம்பெயர்ந்தவர்கள் தற்போது சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வருகின்றனர். கையில் காசு இல்லாத காரணத்தால் பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினரும் சாலை மார்க்கமாக நடந்து செல்கின்றனர்.

சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

அப்படி ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளி ராஜஸ்தானிலிருந்து உத்தர பிரதேசத்தில் உள்ள பரேலிக்கு நடந்து செல்கையில், நேற்று அதிகாலையில் ராஜஸ்தானின் சினாவாலி என்ற கிராமத்தில் ஒரு வீட்டின் வெளியே நின்ற சைக்கிளை திருடி சென்றார். அதேசமயம் தான் ஏன் திருடி சென்றதற்கான காரணத்தையும், மன்னிப்பு கேட்டும் ஒரு கடிதத்தை விட்டு சென்றார். அந்த கடிதத்தில், நான் உதவியற்ற தொழிலாளி மற்றும் நடக்க முடியாத மாற்று திறனாளி மகனின் தந்தை. அதனால்தான் உங்கள் சைக்கிளை எடுத்து செல்கிறேன் மற்றும் முடிந்தால் என்னை மன்னியுங்கள். ஏனென்றால் என்னிடம் எந்தவொரு சைக்கிள் அல்லது வாகனம் கிடையாது மற்றும் என் மகனால் நடக்க முடியாது. நான் பரேலி செல்கிறேன். உங்களது உதவியற்ற தொழிலாளி முகமது இக்பால் கான் என அதில் தெரிவித்துள்ளார்.

சைக்கிளை திருடியவர் அதன் உரிமையாளருக்கு எழுதி வைத்த கடிதம்

சைக்கிளை பறிகொடுத்த அதன் உரிமையாளர் பிரபு தயால் சைக்கிள் காணாமல் போனது குறித்து போலீசுக்கு புகார் கொடுக்க நினைத்தார் மற்றும் அந்த பகுதி நபர்கள் மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அந்த கடிதத்தை படித்து பார்த்த பிறகு போலீசுக்கு செல்லும் எண்ணத்தை மாற்றி கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில், என் சைக்கிளை சில உள்ளூர் மக்கள்தான் திருடி இருப்பார்கள் என சந்தேகப்பட்டேன் ஆனால் பிறகு நான் அந்த கடிதத்தை பார்த்ததும் புகார் கொடுக்க போலீசுக்கு செல்ல வேண்டாம் என முடிவு செய்தேன் என தெரிவித்தார்.