சேவை செய்பவர்களையும் காக்கவே நடவடிக்கை! – தடை பற்றி அமைச்சர் உதயகுமாரின் அடடே விளக்கம்!

 

சேவை செய்பவர்களையும் காக்கவே நடவடிக்கை! – தடை பற்றி அமைச்சர் உதயகுமாரின் அடடே விளக்கம்!

கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ வழியின்றி தவிக்கும் மக்களுக்கு நேரடியாக உதவி செய்யத் தடை விதிக்கப்பட்டதற்கு அவர்களை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம்தான் காரணம் என்று அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ வழியின்றி தவிக்கும் மக்களுக்கு நேரடியாக உதவி செய்யத் தடை விதிக்கப்பட்டதற்கு அவர்களை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம்தான் காரணம் என்று அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக எதிர்க்கட்சிகள், அமைப்புகள் உதவிப் பொருட்கள் வழங்கத் தமிழக அரசு தடைவிதித்தது. அரசும் உதவி செய்வது இல்லை, செய்பவர்களையும் தடுப்பது நியாயமா என்று அரசியல் கட்சிகள், அமைப்புகள், பொது மக்கள் கொந்தளித்தனர். இதைத் தொடர்ந்து தடை விதிக்கவில்லை, மக்களை நேரடியாக சந்தித்து உதவி வழங்கத்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. உதவி செய்ய விரும்புகிறவர்கள் அரசிடம் அவற்றை வழங்கினால், அரசே அதை மக்களுக்கு வழங்கும் என்று புது விளக்கம் அளித்தது.

ntk-89

இது நாள் வரை அரசு தன்னிடம் உள்ள அதிகாரிகள், ஊழியர்களை வைத்து உதவி செய்யவில்லை என்பதால்தான் தன்னார்வலர்கள் தாங்களாக வந்து உதவி செய்ய ஆரம்பித்தனர். எங்களிடம் கொடுத்தால் நாங்கள் உதவி செய்வோம் என்றால், இவ்வளவு நாட்கள் அரசு ஏன் உதவி செய்யவில்லை என்ற கேள்வி எழுந்தது. அரசே வீடு வீடாகச் சென்று உதவி செய்ய முடியும் என்றால் தன்னார்வலர்கள் எதற்காக உணவைத் தயார் செய்து கொண்டுவந்து தர வேண்டும்… அரசே உணவு உள்ளிட்டவற்றைத் தயார் செய்து வீடு வீடாக வழங்கலாமே என்ற கேள்வி எழுந்தது.

rb-udhayakumar

இந்த நிலையில் அரசின் உத்தரவு குறித்து வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், சேவை செய்பவதும், அந்த சேவையை பெறுபவரும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் அரசின் முதல் கொள்கை. அதன் அடிப்படையில்தான் அரசின் வழிகாட்டுதல் படி தன்னார்வலர்களின் செயல் நெறி முறைப்படுத்தப்பட்டு ஒரு முன்மாதிரியான வழிகாட்டப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். உதவி செய்ய வேண்டிய நேரத்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு, உதவிகள் செய்ய மக்கள் வெளிய வந்த நிலையில் தடை போட்ட அரசின் கடமை உணர்ச்சியை கண்டு சிலிர்ப்பதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.