சேலம் மாவட்டத்தைப் பிரித்து புதிய மாவட்டம்… – சீமான் கோரிக்கை!

 

சேலம் மாவட்டத்தைப் பிரித்து புதிய மாவட்டம்… – சீமான் கோரிக்கை!

seeman demand new district for salem

சேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் இருந்த மாவட்டங்களைப் பிரித்துத் தனி மாவட்டமாக அறிவித்திருப்பதன் மூலம் மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.

salem district map

கோரிக்கை வராத மாவட்டங்களைப் பிரித்த தமிழக முதல்வர் தனது சொந்த மாவட்ட மக்களின் கோரிக்கைக்குச் செவி சாய்க்காமல் இருப்பது ஏன்? என்று புரியவில்லை என்று கேட்டிருக்கிறார். 
மேலும், சேலம் மாவட்டத்தின் தற்போதைய மக்கள் தொகை 34.82 லட்சமாக உள்ளது. இதில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நகராட்சியாகவும் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாகவும் ஆத்தூர் விளங்குகின்றது. ஆத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து அவசர தேவைகளுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பணிகளுக்குச் செல்வதற்கு 3 மணி நேரமாகிறது. அதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

seeman demand new district for salem

ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்று அந்த மாவட்ட மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார்கள். ஆகவே இப்பொழுது பிரிக்கப்பட்டிருக்கிற மாவட்டங்களை விடப் பரப்பளவில் பெரிய மாவட்டமாகச் சேலம் இருப்பதால் தமிழக முதல்வர் உடனடியாகச் அம்மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று கூறியிருக்கிறார்.