செவ்வாய் கிரகத்தின் ஒரு பகுதிதாங்க நிலா… ட்ரம்பின் சர்ச்சை பேச்சும்! நெட்டிசன்களின் சேட்டையும்!!

செவ்வாய் கிரகத்தின் ஒரு பகுதிதாங்க நிலா… ட்ரம்பின் சர்ச்சை பேச்சும்! நெட்டிசன்களின் சேட்டையும்!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த ஒரு கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த ஒரு கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

நாசா இன்னும் நிலவுக்கு செல்லபோவதாக சொல்லிக்கொண்டிருக்கிறது. அதை நாம்  50 ஆண்டுகளுக்கு முன்னரே செய்துவிட்டோம்.  நாசா இன்னும் மிகப்பெரும் விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது நிலவை உள்ளடக்கிய செவ்வாய்க்கு செல்வது குறித்த, பாதுகாப்பு மற்றும் அறிவியல் மீது கவனம் செலுத்த வேண்டும்” என ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார். செவ்வாய் கிரகத்தின் ஒரு பகுதிதான் நிலவு என ட்ரம்ப் தெரிவித்திருக்கும் கருத்தை நெட்டிசன்கள் கலாய்த்துவருகின்றனர்.

முன்னதாக  பிரதமர் மோடி பாகிஸ்தானில் செயல்பட்ட தீவிரவாத முகாம்களை தகர்க்க இந்திய போர் விமானங்களை அனுப்பியபோது, மேகமூட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுமாறு, தான் அறிவுரை கூறியதாக கூறினார். இதனை நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர். இந்நிலையில் ட்ரம்ப் இதுபோன்று தெரிவித்திருக்கும் கருத்துக்கு மோடியின் அண்ணன் ட்ரம்பாக இருப்பார் போல என கலாய்த்து மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.