செவிலியர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கக் கூடாது: உயர்நீதி மன்றம் உத்தரவு…!

 

செவிலியர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கக் கூடாது: உயர்நீதி மன்றம் உத்தரவு…!

தேர்வின் முடிவில், குறிப்பிட்ட மதிப்பெண் எடுக்காத 56 பேரை தற்காலிகமாக மருத்துவப் பணி தேர்வாணையம் பணியமர்த்தியது. 

கடந்த ஜூலை 23 ஆம் தேதி, செவிலியர்களுக்கான 2,345 காலியிடங்களைப் பூர்த்தி செய்யத் தேர்வு நடத்தப்பட்டது. எல்லா அரசு தேர்வுகளிலும் இருப்பது போல, இந்த தேர்விலும் பிரிவு வாரியாக குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டது. தேர்வின் முடிவில், குறிப்பிட்ட மதிப்பெண் எடுக்காத 56 பேரை தற்காலிகமாக மருத்துவப் பணி தேர்வாணையம் பணியமர்த்தியது. 

Nurse exam

இதனை எதிர்த்து செவிலியர் பட்டதாரி திவ்ய பாரதி, தேர்தலில் முறையாக ஆட்களைத் தேர்வு செய்யாததால் மீண்டும் தேர்வு நடத்தக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு அளித்தார். அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி, மதிப்பெண் குறைவாக எடுத்து தற்காலிக பணியில் அமர்த்தப்பட்ட  செவிலியர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.  மேலும், திவ்ய பாரதி அளித்த மனுவிற்கு வரும் 14 ஆம் தேதிக்குள் மருத்துப் பணி தேர்வாணையம் பதிலளிக்க வேண்டும் என்று  உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன. 

Nurse