செல்வத்தைப் பெருக்கும் ஆடிப்பூரம்

 

செல்வத்தைப் பெருக்கும் ஆடிப்பூரம்

ஆடிமாதம் முழுக்கவே எங்கெங்கு திரும்பினாலும் விழாக்களும், கொண்டாட்டங்களும் தான். அதிலும்  `ஆடிப்பூரம் ’ இன்னும் மேன்மை என்று சொல்லத்தக்க அளவு சைவத்திலும், வைணவத்திலும்  திருவிழாக்களும்,     கொண்டாட்டங்களும் நிறையவே உண்டு.

செல்வத்தைப் பெருக்கும் ஆடிப்பூரம்

ஆடிமாதம் முழுக்கவே எங்கெங்கு திரும்பினாலும் விழாக்களும், கொண்டாட்டங்களும் தான். அதிலும்  `ஆடிப்பூரம் ’ இன்னும் மேன்மை என்று சொல்லத்தக்க அளவு சைவத்திலும், வைணவத்திலும்  திருவிழாக்களும்,     கொண்டாட்டங்களும் நிறையவே உண்டு.

`பூரம்’ என்றால் ‘பெருக்கு’  என்பது பொருள். ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுவது போல இந்நாளில் நம் வாழ்வில் நாம் செய்ய ஆரம்பிக்கும் அனைத்து செயல்களும் பெருகும் என்பது காலம் காலமாக நம்மிடையே உள்ள நம்பிக்கை. இந்த ஆடிப்பூரத்தில் தான் அம்பிகை உமாதேவியும் உலகை ரட்சிக்க மகா சக்தியாக உதித்ததாக வும், அதனாலேயே யோகிகளும், சித்தர்களும் தங்கள் தவத்தை இந்த நாளில் துவக்குகின்றனர் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
ஈரேழ் உலகத்தையும் படைத்து , காத்து நிற்கிற லோகமாதாவிற்கு அவள் என்றென்றும் நித்தியகன்னி என்று வேதங்கள் உரைப்பினும், சாதாரண மானுடப்பெண்ணாய் உருவகித்து,  மஞ்சள், சந்தன காப்பிட்டு  கோலாகலமாக வளைகாப்பு  நடத்துகிற நன்னாளே `திருவாடிப்பூரம்’. இந்த உற்சவத்தால் அம்பிகை உள்ளம் குளிர்ந்து பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை  தருவதாக ஐதீகம். அம்மனுக்கு அணிவித்த வளையல்களை கோவில்களில் பிரசாதமாக தருவார்கள். இவற்றை  கன்னிப்பெண்கள் அணிந்திட  வெகு விரைவில் நல்ல வரன் அமையும். குழந்தைவரம் வேண்டுவோருக்கு குழந்தை வரம், சுமங்கலிப் பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி  என்று வேண்டியவர்களுக்கு வேண்டியபடி வரங்களை அருளும் தினமாக இந்த ஆடிப்பூரம் போற்றப்படுகிறது.

ஆடிப்பூரத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே அவரவர் வீடுகளில் நவதானியங்கள் விதைத்து , முளைப்பாரியை செலுத்தும் நாளாகவும் சில இடங்களில் கொண்டாடப்படுகிறது. முளைப்பாரியின் செழிப்பைக் கண்டு இந்த ஆண்டின் அவரவர் வீட்டின் வளங்கள் அமையும் என்றும் நம்பப்படுகிறது.
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள், இந்த ஆடிப்பூரத்திலே தான் இப்பூமியிலே அவதரித்தாள். வைணவத்திருத்தலங்களிலும்  திருவிழாக்களும், தேரோட்டமுமாக 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது.