செல்லாத ரூபாய் நோட்டுக்கள் கொடுத்து வாங்கிய சொத்துக்கள் இதுதான்! – சசிகலா எழுதிய கடிதம் சிக்கியது?

 

செல்லாத ரூபாய் நோட்டுக்கள் கொடுத்து வாங்கிய சொத்துக்கள் இதுதான்! – சசிகலா எழுதிய கடிதம் சிக்கியது?

செல்லாத ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தி வாங்கப்பட்ட சொத்துக்கள் பட்டியலை சசிகலா எழுதிய கடிதத்திலிருந்து வருமான வரித்துறையினர் கைப்பற்றியதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

செல்லாத ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தி வாங்கப்பட்ட சொத்துக்கள் பட்டியலை சசிகலா எழுதிய கடிதத்திலிருந்து வருமான வரித்துறையினர் கைப்பற்றியதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

modi

2016ம் ஆண்டு ரூ.1000, 500 நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதனால், கருப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்குத்தான் பாதிப்பு என்றும் பொது மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் வராது என்றும் கூறப்பட்டது. ஆனால், சேகர் ரெட்டி தொடங்கி பல கோடீஸ்வரர்கள் வீட்டில் புதிய ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டாக சிக்கின… அப்பாவி மக்கள்தான் 100க்கும் 200க்கும் திண்டாடி மணிக்கணக்கில் ஏ.டி.எம் வாசலில் நின்றனர். சில உயிரிழப்புக்கள் கூட ஏற்பட்டது. 

reddy

பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோது சசிகலா குடும்பத்தினர் பழைய ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்து கோடிக் கணக்கில் சொத்துக்கள் வாங்கியதாக வருமான வரித்துறை நடத்திய சோதனையில் தெரியவந்தது. ஆனால், எந்த எந்த சொத்துக்கள் என்பதைக் கண்டறிய முடியாமல் வருமான வரித்துறையினர் திணறி வந்ததாக கூறப்பட்டது. தற்போது, இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஒரு கடிதத்தில் அந்த சொத்துக்கள் பற்றிய விவரத்தை சசிகலா கைப்பட எழுதியதாக கூறப்படுகிறது

vivek

.இந்த கடிதம் பற்றி அப்போதே விவேக் ஜெயராமனிடம் விசாரணை நடத்தப்பட்டதாம். அப்போது, அவர் சில மாதங்களுக்கு முன்பு என்னுடைய காவலாளி என்னிடம் இந்த கடிதத்தைக் கொடுத்தார். யாரோ ஒருவர் வந்து கொடுக்கச் சொன்னதாகவும் அது பற்றி பின்னர் விசாரிக்கலாம் என்று வைத்துவிட்டதாகவும் அப்போது விவேக் ஜெயராமன் கூறினாராம்.
இந்த கடிதம் பற்றி விவேக் வீட்டுக் காவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களும் இந்த கடிதம் பற்றித் தெரியாது என்று கூறியுள்ளனர். சசிகலாவின் வழக்கறிஞர் செந்திலிடம் கேட்டபோது, அது சசிகலாவின் கையெழுத்துதான் என்று அவர் உறுதி செய்துள்ளார். இதன் அடிப்படையில் சசிகலாவிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

sasi

 மேலும் இது தொடர்பாக வருமான வரித்துறையினர் விரிவாக விசாரணை நடத்தி உள்ளனர். “ஜெயலலிதா மரணம் அடைவதற்கு சில நாட்களுக்கு முன்பு செல்லாத பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்கள் வாங்குவது தொடர்பாக சசிகலா என்னிடம் சில தகவல்களைக் கூறினார். அதில் உள்ள விவரங்கள் தான் கடிதத்தில் இருக்கின்றன. 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதியில் விவேக் ஜெயராமனை அவரது வீட்டில் சந்தித்தேன். அப்போது சசிகலாவின் கடிதத்தை விவேக் ஜெயராமன் என்னிடம் காட்டினார்” என்று செந்தில் வருமான வரித்துறையிடம் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் சசிகலாவிடம் வருமான வரித்துறையினர் விளக்கம் கேட்டுள்ளார்களாம்.

sasi

சிறையிலிருந்து எழுதும் கடிதம் எல்லாம் தணிக்கை செய்யப்பட்டே வழங்கப்படும். அப்படி இருக்கும்போது பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது வாங்கிய சொத்துக்களை சசிகலா எப்படி பட்டியலிட்டு எழுதியிருப்பார் என்ற கேள்வி எழுகிறது. அதேபோல், பண மதிப்பிழப்பு நடவடிக்கை நேரத்தில் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

sasi

மருத்துவமனையில் ஜெயலலிதாவை சந்திக்க என்று தினந்தோறும் யாராவது ஒரு தலைவர் வந்துகொண்டே இருந்தனர். அவர்கள் எல்லோரும் சசிகலாவை மட்டுமே சந்தித்து வந்தனர். அப்படி இருக்கும்போது சொத்துக்களை எல்லாம் எப்படி சசிகலா வாங்கியிருப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். சசிகலாவுக்கு சிக்கலை ஏற்படுத்தவே புதிய புதிய குற்றச்சாட்டை கிளப்பி வருவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.