செல்லமாக வளர்த்த ‘சீசருக்காக’ தற்கொலை செய்துகொண்ட பட்டதாரி பெண்!

 

செல்லமாக வளர்த்த ‘சீசருக்காக’ தற்கொலை செய்துகொண்ட பட்டதாரி பெண்!

இது கவிதாவுக்கு பிடிக்காமல் அப்பாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.ஆனால் பெருமாள் தன் முடிவில் உறுதியாக இருந்துள்ளார்.

கோவை : செல்ல நாயை பிரிய மனமில்லாமல் இளம்பெண்  ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை சாமிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் கவிதா. பட்டதாரி பெண்ணான கவிதா பத்திரம் எழுதும் வேலை செய்து வந்துள்ளார். இச்சூழலில் கவிதா தனது வீட்டில் இரண்டு வருடங்களாக சீசர் என்ற நாயை வளர்த்து வந்துள்ளார். கவிதாவின் அன்பாக இருந்த அந்த நாய் அவரை பார்க்காமல் சாப்பிடாமல் தூங்காமல் இருக்கும் அளவுக்கு பழகியுள்ளது. அதேபோல் கவிதாவும் சீசரை செல்லமாக வளர்த்து வந்துள்ளார்.

suicide

ஆனால்  நாய் வளர்ப்பது பெருமாளுக்கு பிடிக்காமலிருந்து வந்துள்ளது. ஒருகட்டத்தில், இரவு நேரங்களில் கூட கவிதாவை காண வேண்டும் என்பதற்காகக் குரைக்குமாம். இதனால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு இடையூறாக இருந்துள்ளது. இதனால் அவர்கள் பெருமாளிடம் வந்து புகார் சொல்ல, நாயை கொண்டு போய்  விட தீர்மானித்துள்ளார் பெருமாள். இது கவிதாவுக்கு பிடிக்காமல் அப்பாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.ஆனால் பெருமாள் தன் முடிவில் உறுதியாக இருந்துள்ளார்.

dog

இந்நிலையில் கடந்த 29-ஆம் தேதி குடும்பத்துடன் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு அறைக்குத் தூங்க சென்ற கவிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  இது தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் கவிதா எழுதிய கடிதம் சிக்கியது. அதில், எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். சீசரை பார்த்து கொள்ளுங்கள் என்று எழுதியுள்ளார். கவிதாவை காணாமல் சீசர் சாப்பிடாமல் சோகத்துடன் உள்ளது.  இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.