செல்போன் வாங்க குவிந்த மக்கள்… திக்குமுக்காடிய ஸ்மார்ட்போன் நிறுவனம்!

செல்போன் வாங்க குவிந்த மக்கள்… திக்குமுக்காடிய ஸ்மார்ட்போன் நிறுவனம்!

கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கில் உள்ளது. அத்தியாவசியப் பொருள்களைத் மற்ற அனைத்து தொழில்களும் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் பச்சை, ஆரஞ்சு பகுதிகளில் மற்ற சில பொருட்களின் விற்பனையைத் தொடங்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

realme

இதனால் அந்த பகுதிகளில் பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்  ஸ்மார்ட்போன்களின் விற்பனையை தொடங்கியுள்ளன. ரியல்மி நிறுவனமும் மே 4ஆம் தேதி முதல் தனது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனையைத் தொடங்குவதாக அறிவித்திருந்தார்கள்.

இந்த அறிவிப்பைப் பார்த்ததும் மக்கள் போன்களை வாங்க குவிந்து வருகின்றனர். ஆன்லைன் ஆர்டர்கள் திணறும் அளவிற்கு பலர் ஸ்மார்ட்போன்களை ஆர்டர் செய்துள்ளனர். ஊரடங்கால் வாழ்வதற்கே வழியில்லை என்று ஒருபுறம் கூற, மறுபுறம் ஸ்மார்போன்கள் ஆர்டர் குவிந்து வருகிறது.