செல்போனை பிடுங்கிய சல்மான் கான் : போலீசில் புகார் கொடுத்த பாண்டே?!

 

செல்போனை பிடுங்கிய சல்மான் கான் : போலீசில் புகார் கொடுத்த பாண்டே?!

தன்னை வீடியோ எடுத்த பத்திரிகையாளரின் செல்போனை பறித்த நடிகர் சல்மான் கான் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

மும்பை: தன்னை வீடியோ எடுத்த பத்திரிகையாளரின் செல்போனை பறித்த நடிகர் சல்மான் கான் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த 24 ஆம் தேதி மாலை மும்பை ஜுஹூவில் இருந்து காந்திவிலி செல்லும் சாலையில், நடிகர் சல்மான் கான் சைக்கிள் ஓட்டியபடி சென்றுள்ளார். அப்போது இதைக் கவனித்த அசோக் ஷ்யாமல் பாண்டே என்ற பத்திரிகையாளரும் அவருடன் பயணித்த புகைப்படக்கலைஞர் சையத் இர்பானும் சல்மானை வீடியோ எடுக்க அனுமதி கேட்டதாகவும், அதற்கு பணியாளர்கள் சம்மதித்ததாகவும் கூறப்படுகிறது. 

salman

இதையடுத்து சையத், செல்போனில் சல்மான் சைக்கிளில் செல்வதை வீடியோ எடுத்தார். இதைக் கண்ட நடிகர் சல்மான் கான், வீடியோ எடுக்கக் கூடாது என்று எச்சரித்தார். இதையடுத்து பாதுகாவலர்கள் சையத்தை பிடித்து தள்ளியுள்ளனர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சையத் அருகில் வந்த சல்மான் எப்படி வீடியோ எடுக்கலாம் என்று திட்டிவிட்டு செல்போனை பிடுங்கி சென்றுள்ளார். இதனால் சையத்தும், பாண்டேவும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.   இதன் பின்னர் சிறிது நேரம் கழித்து சல்மானின் பாதுகாவலர் ஒருவர்  சையத் செல்போனை கொண்டு வந்து கொடுத்துள்ளார். 

salman

இந்நிலையில்  அந்தேரி மேற்கில் உள்ள டி.என் நகர் காவல் நிலையத்தில் செல்போனை பிடுங்கி சென்ற  சல்மான் கான் மீது, பாண்டே புகார் செய்தார். அதே போல் சல்மான் தரப்பிலும் அனுமதியின்றி வீடியோ எடுத்தார்கள் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு வெளிநாடு பறந்துள்ள ஆல்யா மானஸா – சஞ்சீவ் கார்த்திக் ஜோடி: காரணம் தெரியுமா?