செல்ஃபி மோகம் : அருவியில் விழுந்து பரிதாப பலி ..!

 

செல்ஃபி மோகம் : அருவியில் விழுந்து பரிதாப பலி ..!

செல்ஃபி எடுக்க முயன்று அருவியில் விழுந்த இளைஞர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இன்றைய இளைய தலைமுறையினரிடம் ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, செல்ஃபி மோகத்தின் தாக்கம் மிகுந்துள்ளது. சாப்பிடுவதற்கு முன் செல்ஃபி, தூங்குவதற்கு முன் செல்ஃபி , எங்காவது வெளியே சென்றால் செல்ஃபி  என எங்கே பார்த்தாலும் செல்ஃபி தான். சிலருக்கு செல்ஃபி  எடுத்து அதனை போஸ்ட் செய்யாவிட்டால் தூக்கம் கூட வராது. ஆனால், இதுவே பல பேரின் உயிரையும் பறித்துள்ளது. அதே போல் செல்ஃபி எடுக்க முயன்று அருவியில் விழுந்த இளைஞர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Dead

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பீமா அருவியில் முரளி என்ற 22 வயது இளைஞரும் மணிகண்டன் என்ற 19 வயது இளைஞரும் குளிப்பதற்காகச் சென்றுள்ளனர். குளிப்பதற்கு முன்னால் அங்கிருந்த பாறை மீது ஏறி செல்ஃபி  எடுக்க முயன்றுள்ளார். அப்போது, அந்த பாறை வழுக்கி தவறி அருவியில் விழுந்துள்ளார், தான் நண்பனை மீட்க மணிகண்டனும் அருவியில் குதித்த போது அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதனால், மணிகண்டனால் முரளியை மீட்க முடியவில்லை. உடனே, அருகிலிருந்தோர் காவல் துறைக்குத் தகவல் அளித்துள்ளனர்.

Dead

அங்கு விரைந்து வந்த காவல்துறை, மணிகண்டனை மட்டுமே உயிருடன் மீட்டுள்ளனர் பாறையிலிருந்து வழுக்கி விழுந்ததில் முரளி தலையில் பலமாகக் காயம் ஏற்பட்டுள்ளது. முரளி விழுந்த உடன், அருவியிலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இனிமேலாவது, இளைஞர்கள் பாதுகாப்பற்ற இடங்களில் செல்ஃபி எடுப்பதைத் தவிர்த்தால், இத்தகைய உயிர்ச்சேதங்களைத் தடுக்க இயலும்.