செல்ஃபி மோகத்தால் உயிரிழந்த தம்பதி: அதிர்ச்சி தரும் பிரேதபரிசோதனை அறிக்கை?

 

செல்ஃபி  மோகத்தால்  உயிரிழந்த தம்பதி: அதிர்ச்சி தரும் பிரேதபரிசோதனை அறிக்கை?

அமெரிக்காவில் உயரமான மலையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த கேரள தம்பதி மது அருந்தி இருந்தது தெரிய வந்துள்ளது.

வாஷிங்டன்: அமெரிக்காவில் உயரமான மலையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த கேரள தம்பதி மது அருந்தி இருந்தது தெரிய வந்துள்ளது.

couple

கேரளா மாநிலம் கன்னூரைச் சேர்ந்தவர் விஷ்ணு. என்ஜினியரான இவர் மனைவி மீனாட்சியுடன் வேலைக்காக அமெரிக்கா சென்றனர். உயரமான இடங்களுக்குச் சென்று செல்ஃபி எடுப்பதை வழக்கமாக வைத்திருந்த தம்பதியினர் கடந்த அக்டோபர் மாதம் மத்திய கலிபோர்னியாவில் உள்ள யாஸ்மிடே தேசிய பூங்காவின் 800 அடி உயர மலை மீது  ஏறி சுற்றிப் பார்த்தனர். பின்னர் மலை உச்சியின் ஓரத்தில் நின்று செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். அப்போது நிலை தடுமாறி 800 அடி பள்ளத்தில் விழுந்து உடல் சிதைந்து உயிரிழந்தனர்.

couple

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள அவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையில்,  தம்பதியினர் இருவரும் மது போதையில் இருந்தது தெரியவந்துள்ளது. மது போதையில் தான் அவர்கள் தவறி விழுந்திருக்க வேண்டும் என்றும்  கீழே விழுந்ததில் தலை,கழுத்து, மார்பு, அடிவயிறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.