செல்ஃபி எடுக்க அனுமதித்தால் இடுப்பில் கைபோட்ட ரசிகர்! அதிர்ச்சியில் சாரா அலிகான் என்ன செய்தார் தெரியுமா?

செல்ஃபி எடுக்க அனுமதித்தால் இடுப்பில் கைபோட்ட ரசிகர்! அதிர்ச்சியில் சாரா அலிகான் என்ன செய்தார் தெரியுமா?

சயிப் அலிகானின் மகளும் பாலிவுட் நடிகையுமான சாரா அலிகானின் இடுப்பில் ரசிகர் ஒருவர் கை வைக்க முயன்றபோது அமைதியாக அதை அவர் எதிர்கொண்ட விதம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
பிரபலங்கள் என்றாலே அவர்களைக் காண கூட்டம் கூடிவிடும். மொபைல் போன் வருகைக்குப் பிறகு செல்ஃபி எடுக்க முண்டியடிக்கும் கூட்டம் அதிகரித்துவிட்டது. இதனால் வெறுப்பில் சிலர் மொபைல் போனை தட்டிவிடும் சம்பவங்கள் நடக்கின்றன. ஆனால், பாலிவுட் நட்சத்திரங்கள் சில நேரங்களில் செல்ஃபி எடுக்க ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். 

sara alikhan

மும்பை விமானநிலையத்துக்கு நடிகை சாரா அலிகான் வந்துள்ளார். அப்போது விமானநிலையத்தில் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டுள்ளார். அவரும் ஒ.கே சொல்ல. மரியாதையாக தள்ளி நின்று அவர் செல்ஃபி எடுத்துக்கொண்டு நகர்ந்துவிட்டார். அதைத் தொடர்ந்து அருகிலிருந்த சிலரும் செல்ஃபி எடுத்துள்ளனர். யாருக்கும் ‘நோ’ சொல்லாமல் சிரித்த முகத்துடன் செல்ஃபிக்கு போஸ் கொடுத்துள்ளார் சாரா.
ஐந்து ஆறு பேர் செல்ஃபி எடுத்த நிலையில் வாலிபர் ஒருவர் செல்ஃபி எடுக்க வந்துள்ளார். மிகவும் நெருக்கமாக வந்து நின்ற அவர், திடீரென்று சாரா இடுப்பில் கைபோட்டுள்ளார்.

#saraalikhan is back from New York #airportdiaries #viralbhayani @viralbhayani

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

பின்னால் நின்ற பாதுகாவலர் அவரை தடுக்க, அடுத்து சாரா டென்ஷன் ஆவாரோ என்று பார்த்தால் அப்படி அவர் கூலாகவே இருந்தார். ஆனால், மிகவும் ஜாக்கிரதையாக அந்த நபருக்கு செல்ஃபி போஸ் கொடுத்து அந்த இடத்தைவிட்டு வேகவேகமாக வெளியேறினார்.
சாரா அலிகான் விமானநிலையத்தில் முதலில் ஒருவருக்கு செல்ஃபி கொடுக்க ஆரம்பித்தது முதல் விமானநிலையத்தைப் பரபரப்பாக கடந்து வெளியேற முயற்சிக்கும் வரையிலான வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இடுப்பில் கைபோட்ட பிறகும் கூட கோபத்தைக் கட்டுப்படுத்தி அமைதிகாத்த சாராவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வரும் வேளையில், செல்ஃபிக்கு அனுமதித்த சாராவின் இடுப்பில் கை வைத்த இளைஞரையும் வெளுத்து வாங்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.