செருப்பு தைக்கும் தொழிலாளர்களால் திறக்கப்பட்ட கரூர் காங்கிரஸ் அலுவலகம்!

 

செருப்பு தைக்கும் தொழிலாளர்களால் திறக்கப்பட்ட கரூர் காங்கிரஸ் அலுவலகம்!

கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளர்களால் கரூர் எம்பி ஜோதிமணி அலுவலகம் திறக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளர்களால் கரூர் எம்பி ஜோதிமணி அலுவலகம் திறக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கரூர் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜோதிமணி. ராமகிருஷ்ணபுரத்தில் அமைக்கப்பட்டுள்ல இவரது அலுவலகத்தை பட்டியிலனத்தைச் சேர்ந்த காலனி தைக்கும் தொழிலாளர்கள் ராமச்சந்திரன்,  தமிழ்செல்வன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்தனர்.  எளிய மக்களின் அலுவலகமாக எம்பி அலுவலகம் இருக்க வேண்டும் என்பதற்காகவே செருப்பு தைக்கும் தொழிலாளர்களால் காங்கிரஸ் அலுவலகம் திறக்கப்பட்டதாக ஜோதிமணி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி உள்ளிட்ட கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள், காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

jothimani

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆளும் பாஜக குடியுரிமை சட்டம் என்ற பெயரில் இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கிறது.   காலங்காலமாக வாழ்ந்து வரும் மக்கள் எதற்காக தங்களைப் பற்றி நிரூபிக்க வேண்டும்.  அதிமுக தங்களது ஊழல்களை மறைக்கவே, சிஏஏ சட்டத்துக்கு மாநிலங்களவையில் ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழக மண் பாஜகக்கு எதிரான மண், மக்களுக்கு இப்போது தேவை கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் முன்னேற்றம் மற்றும் அடிப்படை உரிமையே தவிர குடியுரிமை சட்டம் அல்ல” எனக்கூறினார்.