செயல்படாத கொரோனா பரிசோதனை கருவிகளை சீனாவுக்கே திருப்பி அனுப்ப திட்டம்!

 

செயல்படாத கொரோனா பரிசோதனை கருவிகளை சீனாவுக்கே திருப்பி அனுப்ப திட்டம்!

நாட்டில் கொரோனா பரவல் மூன்றாம் நிலைக்கு பரவாமல் பெருமளவு தடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். 

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், “பொது முடக்கம் காரணமாக வைரஸ் பரவல் இரட்டிப்பாவது ஐந்து நாட்களில் இருந்து ஒன்பது நாட்களாக அதிகரித்துள்ளது. இது நம்பிக்கை கை தரும் செய்தி. மேலும் குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் இரட்டிப்பாகியுள்ளது. கொரோனா தொற்றுள்ளோரில் இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. அடுத்து வரும் நாட்களில் மாநில அரசுகளுடன் இணைந்து பரிசோதனைகளை அதிகரித்து தொற்று பரவலை குறைக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்படும். 

rapid kit

சரியாக செயல்படாத கொரோனா பரிசோதனை கருவிகளை சீனாவுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளோம். கொரோனா பரிசோதனை கருவிகளுக்கு இதுவரை எந்த நாட்டிற்கு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை” என தெரிவித்தார்.