செம்மரக் கடத்தல் சந்தேகம்! திருப்பதியில் 38 தமிழக பக்தர்கள் கைது!

செம்மரக் கடத்தல் சந்தேகம்! திருப்பதியில் 38 தமிழக பக்தர்கள் கைது!

திருப்பதி, திருமலைக்கு தரிசனத்திற்காக சென்ற 38 தமிழக பக்தர்களை, செம்மரங்களைக் கடத்துவதற்காக திட்டமிட்டதாக திருமலை தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளது தமிழக பக்தர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. திருப்பதியில், சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்துவதற்காக இந்த 38 பேரும் தமிழகத்தில் இருந்து தொழிலாளர்களாக திருமலைக்கு வந்ததாகவும், போலீசாரை ஏமாற்றுவதற்காக திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே தங்கி வனப்பகுதிக்குள் செல்ல முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

tree

திருப்பதியில் ஏழுமலையான் கோவிலுக்கு எதிரே நாதநீராஞ்சன மண்டபமும், பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தும் அகிலாண்டம் இடமும் உள்ளது. இந்த 2 இடங்களிலும் சில பக்தர்கள் இருந்ததை சிசிடிவி கேமிரா மூலமாக பார்த்த வஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள், அவர்களின் நடவடிக்கையில் சந்தேகப்பட்டு அங்கிருந்த 38 பேரையும் அழைத்து விசாரித்துள்ளனர். அதிகாரிகளின் விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 15 பேரும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேரும் வேலூரைச் சேர்ந்த 17 பேரும் இருந்தது தெரிய வந்துள்ளது.  

arrest

இவர்கள் அனைவரும், சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டுவதற்காக அழைத்து வரப்பட்டு, பக்தர்களோடு பக்தர்களாக ஏழுமலையான் கோவில் அருகே காத்திருந்ததாக போலீசார் குற்றம் சாட்டுகின்றனர். இதையடுத்து 38 பேரும் திருமலை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து திருமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.