சென்னை மெரினாவில் பொங்கி வரும் நுரை! 

 

சென்னை மெரினாவில் பொங்கி வரும் நுரை! 

சென்னை மெரினா கடற்கரையில் திடீரென நுரை பொங்கி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மெரினா கடற்கரையில் திடீரென நுரை பொங்கி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னை மெரினா கடற்கரையில், கடல்நீர் உள்வாங்குவது, திடீரென கடல் நீர் நீல நிறத்தில் கொலிப்பது உள்ளிட்ட ஆச்சர்யமான சம்பவங்கள் அடிக்கடி நடப்பதுண்டு. அந்த வகையில் இன்று மாலை முதல் மெரினா கடற்கரையில் பனிபோல் நுரைகள் பொங்கி வருகின்றன.

 

 

கடல்நிரீல் ரசாயனங்கள் மற்றும் கழிவுகள் அதிகளவில் கலந்ததே இந்த நுரைக்கு காரணம் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் கடல் நீர் மற்றும் நுரை மாதிரிகளை கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர். 

Foam

படம்: ANI

நேற்று காலையும் இதேபோல அதிக அளவில் நுரை காணப்பட்டதாகவும், மாலை மறைந்ததாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது இன்று மாலை மீண்டும் நுரை பொங்கி வருகிறது. சென்னை முழுவதும் கன மழை பெய்துவரும் நிலையில் மெரினாவில் கடல்நீரிலிருந்து வரும் நுரை பீதியடையவைக்கிறது.