சென்னை பேரணியில் பங்கேற்ற முதியவரின் வீடியோ வைரல் ! நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்த எம்.கே.எஸ். !

 

சென்னை பேரணியில் பங்கேற்ற முதியவரின் வீடியோ வைரல் ! நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்த எம்.கே.எஸ். !

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து சென்னையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் மாபெரும் பேரணி நடத்தியது. சென்னை  எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் இருந்து ராஜரத்தினம் மைதானம் வரை பேரணி நடைபெற்றது. இதில் ப.சிதம்பரம், கே.எஸ்.அழகிரி, வைகோ, இரா.முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், காதர் மொய்தீன், திருமாவளவன், கி.வீரமணி, ஜவாஹிருல்லா, ஈ.ஆர்.ஈஸ்வரன், ஜெயசீலன், அனைத்துக் கட்சி எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், பல்வேறு அணியினர் பேரணியில் கலந்துகொண்டனர். இந்தப் பேரணியில் ஓசூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்த 84 வயது முதியவர் நாராயணப்பா கலந்துகொண்டார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் திமுக நடத்திய பேரணியில் பங்கேற்ற 84 வயது முதியவரை அழைத்து பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார் மு.க.ஸ்டாலின். 

MK-stalin-and-old-man

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து சென்னையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் மாபெரும் பேரணி நடத்தியது. சென்னை  எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் இருந்து ராஜரத்தினம் மைதானம் வரை பேரணி நடைபெற்றது. இதில் ப.சிதம்பரம், கே.எஸ்.அழகிரி, வைகோ, இரா.முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், காதர் மொய்தீன், திருமாவளவன், கி.வீரமணி, ஜவாஹிருல்லா, ஈ.ஆர்.ஈஸ்வரன், ஜெயசீலன், அனைத்துக் கட்சி எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், பல்வேறு அணியினர் பேரணியில் கலந்துகொண்டனர். இந்தப் பேரணியில் ஓசூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்த 84 வயது முதியவர் நாராயணப்பா கலந்துகொண்டார். அப்போது அவர், “ஓசூர் சமத்துவபுரத்தில் இருந்து வருகிறேன். ஈழத் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அநீதி இழைக்கப்படுகிறது. திமுகவின் அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துகொள்வேன்” எனத் தெரிவித்தார். அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

 

இதையடுத்து அவருக்கு அழைப்பு விடுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் அவருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி கௌரவித்தார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில், முதுமை உடலுக்குத்தான், உள்ளம் என்றும் இளமையுடன் இயக்கத்திற்காக இயங்கும் எனும் வகையில், #CAA எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்ற ஓசூரின் 84வயது பெரியவர் நாராயணப்பாவிற்கு நினைவுப் பரிசு வழங்கி மகிழ்ந்தேன்.  அவரது கைகளைப் பற்றிய போது, கழகம் எனும் பேரியக்கத்தின் வேர்களைத் தொட்ட உணர்வு! ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.