சென்னை திருவல்லிக்கேணியில் மேலும் ஒரு காவலருக்கு கொரோனா தொற்று

 

சென்னை திருவல்லிக்கேணியில் மேலும் ஒரு காவலருக்கு கொரோனா தொற்று

திருவல்லிக்கேணியில் மேலும் ஒரு காவலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சென்னை: திருவல்லிக்கேணியில் மேலும் ஒரு காவலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை 1154 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் சுமார் 9000 பேருக்கு மேல் கொரோனா தொற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளனர். தமிழகத்தில் 27 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 2300-க்கும் மேற்பட்டோருக்கு மாநிலத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் சுமார் 1200 பேருக்கு மேல் கொரோனா தொற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளனர். மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்யும் பொருட்டு கொரோனாவை எதிர்த்து போராடி வருகிறார்கள்.

ttn

இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் மேலும் ஒரு காவலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. போக்குவரத்து காவல் நிலைய முதல்நிலை காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றனர். மேலும் திருவல்லிக்கேணி காவலர் குடியிருப்பில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் மோப்ப நாய் பிரிவில் பணியாற்றும் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் பல காவலர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் பலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.