சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் விலை அதிகரிப்பு

 

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் விலை அதிகரிப்பு

எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் விலை 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை: எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் விலை 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் விலை 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. முன்னர் ரூ.10 ஆக இருந்த பிளாட்பார்ம் டிக்கெட்டின் விலை தற்போது ரூ.15 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு 3 மாதங்கள் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜூன் 30-ஆம் தேதி வரை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் விலை ரூ.15 ஆக வசூலிக்கப்படும்.

ttn

கோடைக்காலம் நெருங்குவதால் ரெயில் நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கையும், அவர்களை வழியனுப்ப வந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும் என்பதால் இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். பிளாட்பார்ம் டிக்கெட் விலை உயர்வால் ரெயில் நிலையத்தில் தேவையற்ற கூட்டம் சேராது என்று எதிர்பார்க்கப்படுகிறது.