சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் விடுமுறை!

 

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு  27 மற்றும் 28 ஆம் தேதிகளில் விடுமுறை!

வெளிநாடு பயணத்தில் இருந்தவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றனர்.  

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க  மக்களின் நலன் கருதி வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு பயணத்தில் இருந்தவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றனர்.  

tn

தமிழகத்தில் 15 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது. 

tt

இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு  வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று பர‌வுவதை தடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் கூட்டமைப்பு  அறிவித்துள்ளது. முன்னதாக , கோயம்பேடு சந்தையில் மொத்தமாக காய்கறி வாங்க மட்டுமே அனுமதி, சில்லறை வர்த்தகத்திற்கு தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகர ஆணையர் கூறியது குறிப்பிடத்தக்கது.