சென்னை கடற்கரையில் கடத்தப்பட்ட 8 மாத கைக்குழந்தை மீட்பு

 

சென்னை கடற்கரையில்  கடத்தப்பட்ட 8 மாத கைக்குழந்தை மீட்பு

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபாதையில் படுத்துறங்கிய பெண்ணிடமிருந்து கடத்தப்பட்ட குழந்தை மீட்கப்பட்டுள்ளது. 

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபாதையில் படுத்துறங்கிய பெண்ணிடமிருந்து கடத்தப்பட்ட குழந்தை மீட்கப்பட்டுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை பூர்வீகமாகக் கொண்டவர் சினேகா. நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த இவர், கணவரைப் பிரிந்து தனது 8 மாத கைக்குழந்தை ராஜேஸ்வரியுடன் சென்னைக்கு வந்துள்ளார். அங்கு ஊசிமணி, மாலைகள், பலூன்கள் விற்று வந்த சினேகா, கடற்கரை சாலையோர நடைபாதையில் தனது சமுதாய மக்களுடன் வசித்து வருகிறார். வியாழனன்று இரவு வழக்கம்போல, தனது குழந்தையுடன் உறங்கிய சினேகா, வெள்ளியன்று காலை குழந்தை ராஜேஸ்வரியைக் காணாமல் அதிர்ந்து போனார். எங்கு தேடியும் கிடைக்காததால், சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

குழந்தை

இதையடுத்து அந்த பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்த போது இரண்டு பெண்கள் அந்தக் குழந்தையை தூக்கிச் சென்றது தெரியவந்தது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

குழந்தை

இந்த நிலையில் கடத்தலில் ஈடுபட்ட பெண்கள் அந்தக் குழந்தையை கே.கே. நகர் பகுதியில் விட்டுவிட்டுச் சென்றனர். இதையடுத்து குழந்தையை மீட்ட காவல்துறையினர், அதற்கு சிகிச்சை அளித்து பின்னர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தையை கடத்திய பெண்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.