சென்னை அணியில் அதிரடி மாற்றங்கள்; முதலில் பேட்டிங் செய்கிறது மும்பை !!

 

சென்னை அணியில் அதிரடி மாற்றங்கள்; முதலில் பேட்டிங் செய்கிறது மும்பை !!

ஐ.பி.எல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 

ஐ.பி.எல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 

நடப்பு தொடரில் சென்னை அணிக்கு முதல் தோல்வியை பரிசளித்த மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை அணி இன்று பழீ தீர்க்க வேண்டும் என சென்னை ரசிகர்கள் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. 

தொடர்ந்து முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த தோனியும், காயம் காரணமாக ஜடேஜாவும், டூபிளசிஸும் இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக துருவ் சோரி, மிட்செல் சாட்னர் மற்றும் முரளி விஜய் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அம்பத்தி ராயூடு விக்கெட் கீப்பராக செயல்பட உள்ளார். 

அதே போல் மும்பை இந்தியன்ஸ் அணியில், மாயன்க் மார்கண்டே மற்றும் பென் கட்டிங் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக அனுகுல் மற்றும் ஈவன் லீவிஸ் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணி:

டி.காக், ஈவன் லீவிஸ், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, கீரன் பொலார்டு, க்ரூணல் பாண்டியா, அனுகுல் ராய், ராகுல் சாஹர், லசீத் மலிங்கா, ஜஸ்ப்ரிட் பும்ராஹ். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:

சேன் வாட்சன், முரளி விஜய், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயூடு, துருவ் சோரே, கேதர் ஜாதவ், டூவைன் பிராவோ, மிட்செல் சாட்னர், தீபக் சாஹர், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர்.